அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி...
|
பின் காலனியச் சூழல், உலகமயமாதல் ஆகியவற்றின் எழுபுலத்தில் மரபுவழி ஊடகங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் வளர்வுறும் நாடுகளிலே மேலெழத் தொடங்கியுள்ளன. கலாநிதி சி.ரகுராம் அவர்கள் மேற்கொண்ட நிகழ்த்தும் கலைகள் பற்றிய அகன்று ஆழ்ந்த இந்த ஆய்வு அந்த வகையிற் குறிப்பிடத்தக்கது.
தொடர்பாடல் இயல், சமூகவியல், உளவியல், அரசியற் பொருளியல், அரங்கியல் முதலாம் பன்முக அறநெறிகள் (ஆரடவனைளைஉipடiயெசல) சார்ந்த நிலையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அணுகுமுறை ஆய்வுத் தளத்தை வலிமைப்படுத்துகின்றது.
தொடர்பாடல் நோக்கில் நாட்டார் ஊடகங்கள்;, நாட்டார் நிகழ்த்து கலைகள் ஆகியவற்றின் மேலெழு கோலங்களையும் (ளுரசகயஉந ளுவசரஉவரசநள) ஆழ்நிலைக் (னுநநி)கோலங்களையும் கண்டறிவதற்குரியவாறு ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்பாடும் தொடர்பாடலும் ஒன்றிணைந்திருத்தலும், அவை சமூக அடிக்கட்டுமானத்தின் மேற்சுழற்சிகளாக இருத்தலும் குறிப்பிடத் தக்கவை. இந்திய மரபுவழித் தொடர்பாடலும், மரபுவழி ஊடகங்களும் நிகழ்த்துகலைகளும் சமூக அடித்தளம் (டீயளந) மற்றும் மேல் அமைப்பு (ளுரிநச ளுவசரஉவரசந) ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் துல்லியமாகப் புலப்படுத்துகின்றன. விரிவான இந்த ஆய்வின் நீட்சி அதற்குரிய சான்றாகவும் அமைகின்றது.
வேட்டுவ வாழ்க்கை, ஆயர் வாழ்க்கை, நிலமானிய வாழ்க்கை, ஐந்திணை மரபுகள், தொன்மையான வர்த்தக முறைமை, அரசின் உருவாக்கம், கிராமிய வழிபாடுகள், சாதிய அடுக்கமைவு முதலியவற்றின் பண்புநிலை நீட்சியாக மரபுவழி ஊடகங்களும், நிகழ்த்துக்கலைகளும் அமைந்துள்ளன. அவை சமூக வரலாற்
|