உளவியல் ஊடுதலையீடுகள்
|
உளவியல் ஊடுதலையீடுகள் சமகாலத்தில் அதிக முக்கியத் துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆசிரியர், பெற்றார், நிர்வாகிகள், சீர்மியர், உளச்சமூகப் பணியாளர், ஆற்றுப்படுத்துனர் என்ற அனைவரும் இத்துறையில் ஆர்வம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
மிகவும் கனதியான கருத்துக்களைத் தமிழ்மொழி வாயிலாகக் கையளிப்புச் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. விடயம் கனதியான நிலையில் அவற்றைச் சுமந்துசெல்லும் மொழியும் கனதியைத் தாங்கிய நிலையிலேதான் தொழிற்படும்.
ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை கல்வித்தர மேம்பாடு பற்றிய விவாதங்களிலே வலியுறுத்தப் பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த வாசிப்பு என்பது கனதியான உள்ளடக்கத்தை நோக்கிய வாசிப்பாகும்.
'விளங்கவில்லை' என்று மேலோட்டமாகக் கூறுதல் அறிவின் ஆழத்தைத் தரிசிக்காமல் தடுக்கும் எதிர்ப்புலமை நடவடிக்கை யாகும். அறிவு ஆழ்ந்து செல்லும் பொழுது அதற்குரிய சிக்கற்படும் தன்மையும் அதிகரித்துச் செல்லலை அறிவின் ஆய்வு புலப்படுத்தும்.
மேற்கூறிய நுழைவாயிற் கருத்தோடு படிக்கத் தொடங்கலாம்.
சபா.ஜெயராசா
|