பௌதிகப் புவியியல்:புவியின் அமைப்பும் அகச்செயன்முறையும் |
புவியானது இன்று வானவெளியிலிருந்து அவதானிக்கப்படுவது மட்டுமன்றி அதன் சமுத்திரத் தரைகள், தரையுயர்ச்சி மற்றும் அமைப்புக்கள் என்பவற்றையும் மிகத்தெளிவாக அவதானிக்கும் அளவிற்கு விஞ்ஞான ரீதியாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புவியின் தோற்றம் அதன் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்வதற்கான எமது திறன்கள் விருத்தியடைந்துள்ளதுடன் புவியின் வடிவமைப்புக்குக் காரணமான சக்திகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஓர் இயக்கவியல் தொகுதியாக பூமி எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எரிமலைகள், புவிநடுக்கங்கள், மலையாக்கம், கண்ட நகர்வு என்பன புவியின் உட்பகுதி வெப்பத்தின் வெளிப்பாடெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் புவியினைப் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. பௌதிகப் புவியியலுக்கான ஓர் அறிமுகத்துடன் ஆரம்பமாகும் இந்நூலின் உள்ளடக்கத்தில் புவியின் உட்பாகம், கனிப்பொருட்களும் பாறைகளும், கண்ட நகர்வு, எரிமலைகளின் செயற்பாடுகள்; அவற்றினால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள், புவிநடுக்கங்கள் மற்றும் வானிலையாலழிதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டுள்ளது. |