Sandrasekaram, S

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து பின்னர் விரிவுரையாளராக, கல்வியியல் பேராசிரியராக உயர்ந்து, இன்று கல்விப்பீடப் பீடாதிபதியாகவும் அமர்ந்துள்ளார். இவர் கல்வியியல் துறையில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி மிகச் சிறப்புடன் பணியாற்றி வருபவர். 

இன்று கல்வியியல் சார் கட்டுரைகளையும் நூல்களையும் தீவிரமாகவும் அதிகமாகவும் எழுதிக்கொண்டிருப்பவர். கல்வியியல் துறையில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்களையும் விருத்திகளையும் மற்றும் புதிய பரிமாணங்களையும் தெளிவாகத் தமிழில் எடுத்துக்காட்டி வருகின்றார். 
 
குறிப்பாக இவர் அறிவை மக்கள் மயப்படுத்துதல் என்னும் சனநாயகச் செயற்பாட்டிற்கான "அறிவுப் பரம்பல்" இலக்கிய நடவடிக்கையில் ஓர் முன்னோடியாகவும் உள்ளார். இதற்காக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்தி வருபவர்.
சோ.சந்திரசேகரன் புத்தகங்கள்
2013 - கல்வியியல் - உயர் கல்விச் சிந்தனையை வெகுஜனமயமாக்கல்
2011 - கல்வியியல் - கல்வியில் புதிய தடங்கள்
2009 - கல்வியியல் - சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு
2009 - கல்வியியல் - கல்வியியலும் நிகழ்பதிவுகளும்
2008 - கல்வியியல் - அறிவுசார் பொருளாதாரமும் கல்வியும்
2008 - கல்வியியல் - சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்
2017 - கல்வியியல் Educational - மாற்றமுறும் கல்வி முறைமைகள்
2017 - கல்வியியல் Educational - உயர் கல்விச் சிந்தனையை வெகுஜனமயமாக்கல்
2017 - கல்வியியல் Educational - சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு
2017 - கல்வியியல் Educational - சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்
2019 - பொருளியல் - முகாமைத்துவக் கொள்கைகள் - ஓர் அறிமுகம்