Sasikala Kugamoorthi

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகின்ற கலாநிதி சசிகலா குகமூர்த்தி அவர்கள் கல்வித்துறையில் சுமார் மூன்று தசாப்தகால அனுபவத்தினைக் கொண்டவராவார். 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்ற இவர் ஆசிரியப் பணியில் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வியில் தமிது சாதனைக்காக தங்கப்பதக்கத்துடன் கூடிய டிபளோமாவினையும், அதே பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுதத்துவமானி பட்டத்தையும் பின்னர் ஆசிய அபிவிருத்திவங்கியின் புலமைப்பரிசில் பெற்று தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் கல்வியில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராவார். 
 
இலங்கையிலும் இந்தியா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் கல்வி மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குபற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ள இவர் இன்று கல்வித்துறையில் நம்பிக்கையூட்டும் ஆய்வாளராகப் பரிணமித்துள்ளார். 
சசிகலா குகமூர்த்தி புத்தகங்கள்
2012 - கல்வியியல் - யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும்