தமிழர் கல்விச் சிந்தனைகள்
|
பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியவற்றில் மேலைப்புலக் கல்விச் சிந்தனைகள் முதன்மைப்பாட்டுடன் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மரபில் கல்விச் சிந்தனைகள் உருவாக்கம் பெறவில்லையா என்ற வினாவுக்கு விடை தரும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு கோணங்களில் இருந்து எழுகோலம் பெற்ற தமிழர் கல்விச் சிந்தனைகள் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைகள் சங்கப் பாடல்களில் இருந்தே மேற்கிளம்பத் தொடங்கின என்ற கருத்தைப் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தமிழ் வீரயுகப்பாடல் தொடர்பான ஆய்விலே குறித்துரைத்துள்ளார்.
தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் கல்விச் சிந்தனைகளின் வகிபாகத்தைக் கண்டு கொள்வதற்கும் இந்நூல் துணை செய்யும்.
பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தமிழர் கல்விச் சிந்தனைகள் கல்வியியலில் ஒரு தனிப்பாடமாகவோ, ஒரு தனி இதவடிவம் (ஆழனரடந) என்ற நிலையிலோ ஆக்கம் பெறுவதற்குரிய புலமைக் கனதியைக் கொண்டிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தமிழரின் கல்விச் சிந்தனைகள் பற்றிய கருத்து வினைப்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற முன்மொழிவுடன்,
சபா.ஜெயராசா
|