சமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள் |
சமூக விஞ்ஞானங்களில் (Social Sciences) முதன்மையான துறையாகக்கருதப்படும் சமூகவியல் (Sociology) வயதில் இளையது. 19ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இத்துறை இன்று அகலக்கால் பதித்து ஏனைய சமூக விஞ்ஞானங்களை விட ஆய்வுத் துறையில் முன்னணி வகிக்கிறது. சமூகத்தையே தனது ஆய்வுத் தளமாகக்கொண்டியங்கும் இத்துறைக்கு வரவேற்பு பலமானதாகும். வட ஆபிரிக்காவில் பிறந்த இப்னு கல்தூனின் (Ibnu Khaldun) சிந்தனையில் உருவான இத்துறை மேற்கேத்தேய அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டது. சமூகவியலைப் போன்றே, மானிடவியலும் மனிதனை ஆராயும் தளமாகக்கொண்டியங்கும் துறையாகும்.
|