புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

வேதாந்த மெய்யியல்

இந்திய சிந்தனைப் பரப்பில் வேதாந்த மெய்யியலானது ஒரு காத்திரமான இடத்தினைப் பெற்றதொன்றாகும். இந்திய மெய்யிய லானது ஆழமானதும் தாக்கமானதுமான சிந்தனைப் புலத்தைக் கொண்டதென்பதனை வேதாந்த மெய்யியலை அறிந்த பின்னரே மேலைத்தேயச் சிந்தனையாளர்கள் பலர் ஏற்றுக்கொண்டமை அறிதற்குரியதாகும். இத்தன்மை அவர்கள் பலரை மேலும் ஆராய்வதற்குத் தூண்டுவதாகவும் விளங்கிற்று. இதில் குறிப்பாகச் சங்கர மெய்யியல் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வகையில் சங்கர வேதாந்த மானது தத்துவச் செழுமையும் தர்க்க நுட்பச் சிறப்பும் கொண்டதாக அமைந்ததாகும்.  
அதேவேளை இம் மெய்யியலானது விளங்குவதற்குக் கடினமான தொன்றாகவும் பலரால் எடுத்தாளப்பட்டமை காணலாம். 'தெளிவாகத் தெரியாமல் போனால் அது வேதாந்தம்' என எடுத்தாளப்படும் சொல்லாட்சியும் தெரியாததைக் குறிப்பிடுகின்ற போதில் 'நீயும் உன் வேதாந்தமும்' எனும் சொல்லாட்சியும் மக்களிடத்தில் பழக்கத்தில் பயன்படுத்தப்படுவதினின்று வேதாந்தம் கொண்டிருந்த கடினத் தன்மையை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.  இந்திய மெய்யியலை ஒருவர் தெளிவுறப்  புரிந்து கொள்வதென்றால் அல்லது அதன் சிறப்பியல் பினை அறிந்து கொள்வதென்றால் முதற்கண் அவர் வேதாந்த மெய்யியலைத் தெளிவுற அறிந்துகொள்ள வேண்டியது அத்தியாவசிய மானதாகும். இவ்வகையில் இந்திய மெய்யியலைப் புரிந்து கொள்ள முனைபவர்களுக்கும் வேதாந்த மெய்யியலை அறிந்து கொள்ள முனையும் ஆர்வலர்கள் அனைவர்க்கும் இந்நூல் பயன்படவல்லதாகும்.
வேதாந்த மெய்யியலானது அதன் திட்ப நுட்பத்தின் காரணமாக சமகாலச் சிந்தனையிலும் அது பெரிதும் செல்வாக்குச் செலுத


எஸ்.எல்.மன்சூர்
S.L.Manzoor

எஸ்.எல்.மன்சூர் ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகின்றார். இவர் கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டில் நீண்டகால அனுபவம் கொண்டவர். தொடர்ந்து இலக்கியம், சமூகம், கல்வியியல், பண்பாட்டியல், அரசியல் முதலான பல்வேறு களங்களில் ஈடுபட்டு தனக்கான தற்படிமத்தை உருவாக்கி இருப்பவர். படைப்பாக்கத்திலும் வாசிப்புச் செயற்பாட்டிலும் தீவிரமாக ஈடுபட்டு பல்வேறு ஆக்கங்களை படைத்துவருபவர்.