வேதாந்த மெய்யியல் |
இந்திய சிந்தனைப் பரப்பில் வேதாந்த மெய்யியலானது ஒரு காத்திரமான இடத்தினைப் பெற்றதொன்றாகும். இந்திய மெய்யிய லானது ஆழமானதும் தாக்கமானதுமான சிந்தனைப் புலத்தைக் கொண்டதென்பதனை வேதாந்த மெய்யியலை அறிந்த பின்னரே மேலைத்தேயச் சிந்தனையாளர்கள் பலர் ஏற்றுக்கொண்டமை அறிதற்குரியதாகும். இத்தன்மை அவர்கள் பலரை மேலும் ஆராய்வதற்குத் தூண்டுவதாகவும் விளங்கிற்று. இதில் குறிப்பாகச் சங்கர மெய்யியல் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்வகையில் சங்கர வேதாந்த மானது தத்துவச் செழுமையும் தர்க்க நுட்பச் சிறப்பும் கொண்டதாக அமைந்ததாகும். |