கல்வியியலும் நிகழ்பதிவுகளும் |
சமகாலச் சமூகத்தின் பன்முக வளர்ச்சி நிலைகளும், அவற்றை அடியொற்றிய பொருள்கோடலின் கருத்தியல் தழுவிய இணைப்புக்களும் இந்நூலாக்கத்தின் உள்ளடக்கப் பதிவுகளாகவுள்ளன. சமூக இயல்பு தழுவிய கல்விக் கட்டமைப்பின் தொழிற்பாடுகளும் அமைப்பியல் நிலை மாற்றங்களும் (ளுவசரஉவரசயட வுசயளெகழசஅயவழைளெ) கருத்தியல் வயப் பட்ட திறனாய்வுடன் நோக்கப்பட்டுள்ளன. அறிவின் முன்னரங்கம் தொடர்ச்சியாக முன்னெழு நிலையில் நகர்த்தப்பட்டுவரும் வேளை யில் அவற்றுடன் இணைந்து செல்ல வேண்டிய தேவையையும் ஆற்றுப் படுத்தலையும் தெரிவுசெய்யப்பட்ட தலைப்புக்களில் வழங்குதல் இந்நூலாக்கத்தின் மேலெழும் பண்பாக அமைந்துள்ளது. காலாவதி யான அறிவுத் தளங்களில் நின்று நவீன அறிவுப் பிரவாகத்தைப் புலக்காட்சி கொள்ளல் சாத்தியமற்ற அறிகைச் செயற்பாடாகிவிடும் என்பதை உளங்கொள்ளல் வேண்டியுள்ளது. |