சூழல் கதை |
தமிழ்மொழிச் சூழலிலே குழந்தைகளுக்குரிய எழுத்தாக்கங்களிற் கவனம் செலுத்தப்படுமளவுக்கு வளர்ந்த சிறுவர்க்குரிய இலக்கிய ஆக்கங்களிலே போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்பது மனங்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களிலே இளம் இடைநிலை மட்டத்துச் சிறார்களின் வாசிப்புச் சுவையைத் தூண்டும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு பரிசோதனை முயற்சி. இதிலிருந்து கிடைக்கப்பெறும் பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் முயற்சிகளை முன்னெடுக்கலாம். இத்தகைய எழுத்தாக்கங்களுக்கு உற்சாகமளித்து வரும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரும் சேமமடுஃ பத்மம் பதிப்பகத்தினரும் நன்றிக்குரியவர்கள். |