தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும்
|
கோளமயமாக்கலின் எதிர்விளைவுகள் தாய்மொழிகள் மீதான சந்தேகங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. கல்வியியல் நோக்கில் தாய்மொழியின் விசைப்பாடுகளை அறியத் தவறிவிடுமளவுக்கு கோளமயமாக்கல் எதிர்விசையின் அழுத்தங்கள் எழுகை கொண்டுள் ளன. இந்நிலையில் தாய்மொழி பற்றிய தெளிவான புலக்காட்சியைத் தருக்க நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் வெளிப்படுத்துமாறு நண்பர் கள் நீர்வைப் பொன்னையன், தம்பு சிவசுப்பிரமணியம், தெ.மதுசூதனன், உலகநாதர் நவரத்தினம் ஆகியோர் வேண்டிக்கொண்டனர்.
தாய்மொழி வழிக்கல்வி என்பது உலக மொழிகளையோ, பிராந் திய மொழிகளையோ கற்றுக்கொள்வதற்குத் தடையான செயற்பாடு அன்று என்பதனை முதற்கண் நினைவு கொள்ளல் வேண்டும். உலகின் பெரும்பாலான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் பரிச்சியமுடையவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.
மனித மூளையின் ஆற்றல்களை ஆராய்ந்து வரும் நவீன உளவி யலாளர்கள் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய திறனும், கொள்ளக்கூடிய ஆற்றலும் அதற்கு உண்டு என்பதை வலியுறுத்தியுள் ளனர். நவீன கற்பித்தல் முறையியல்களைப் பயன்படுத்தி மொழிக ளைக் கற்பிக்கும் செயற்பாடுகள் வளர்ச்சியடையும் பொழுது பாட சாலைகள் 'மொழித் தொழிற்சாலைகளாக' மேலெழுகை கொள் ளும். நிதானமாக நோக்கும்பொழுது, தாய்மொழியின் நிராகரிப்பு கல்வியின் நிராகரிப்பு ஆகின்றது.
நூலாசிரியர்
|