சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் |
சைவ சமயத்தின் முடிந்த முடிபான கொள்கை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவம் சிவனோடு தொடர்புடையது. சைவ சம-யத்தின் தத்துவக்கொள்கை சைவசித்தாந்தம் எனப்படும். சித்தாந்-தம் எனும்சொல் சித்தத்தின் அந்தம் என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்போது உள்ளத்தினால் எடுக்கப்படும் முடிவு என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் அது முடிந்த முடிபல்ல. திருமூலர் சைவ சித்தாந்தத்திற்குத் தரும் விளக்கம் இந்த இடத்திற் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. 'சைவசித்தம் தெரிவித்த அந்தம்' என்று திருமூலர் விளக்கந் தருகிறார். இந்த வகையிற் திருமந்திரப் பாடல் (1513) தரும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. |