புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் அளவீடும் மதிப்பீடும்

சமகாலக் கல்விச் செயன்முறையில் 'தரவிருத்தி' 'தரக்காப்பீடு' புதுப்பரிமாணமாக எழுச்சி பெற்று வருகின்றது. கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டிலே 'அளவீடும் - மதிப்பீடும்' புதிய சிந்தனை முறைக ளையும் புதிய நோக்கு முறைகளையும் உள்வாங்கி வளர்ந்து வருகின்றது. 
ஆசிரியர்கள் தமது பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமானால் 'கல்வியில் அளவீடும் மதிப்பீடும்' தொடர்பான அறிவைத் திரட்ட வேண்டும். இவை சமூக வாழ்வின் அடிப்படைத் திறனாகவும் வாழ்வாதார நிலைகளில் மேம்பாடுகளை உருவாக்கும் பண்பு கொண்டதாகவும் அமைய வேண்டும். மாணவர்கள் மட்டத்தில் புத்தாக்கங்களை விளைவிக்கும் அறிவின் படிப்படியான வளர்ச்சி ஆளுமையின் படிப்படியான முன்னேற்றம் முதலானவை உருவாக வேண்டும். 
இந்தப் பண்பை ஆசிரியர்களிடையே வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்நூல் ஆக்கமாக உருவாகியுள்ளது. வெற்றிகரமான கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் ஈடுபடுவதற்கான சாதகமான சூழமைவுகளை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் இது அமைகின்றது. விஞ்ஞான மனப்பாங்கு சார்ந்த அணுகுமுறைகளினால் மாணவர் அடைவு மட்டத்தை விளங்கி அளவிடுவதற்கான மதிப்பிடுவதற்கான தற்துணிவை ஆளுமையை ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், புதிய அறிகை மரபு உருவாவதற்கான பண்பாட்டுப் பின்புலத்தையும் இந்நூல் உருவாக்கு கின்றது. 
வினைத்திறன்மிக்க கற்பித்தலை முன்னெடுத்துச் செல்லும் அளவீடும் மதிப்பீடுகளும் மாணவரின் கற்றல் நடத்தை உருவாக்கமும் வகுப்பறை முகாமைத்துடன் இணைந்தவை. கல்வி முகாமைத்துவத்தின் ஒன்றிணைந்த பிரிவாக வகுப்பறை முகா மைத்


ரஸ்மின், எம்.சி
Rasmin, M.C


இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சமூகவானொலி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு நூல்கூட இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை. சில உதிரியான கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் வெளிவந்தபோதும் சமூகவானொலியை ஒரு துறையாகக் கற்பதற்கு அவை எந்தவிதத்திலும் போதியவையல்ல. தாய்மொழியில் ஊடகக்கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன்கருதியே இத்தகைய ஒரு நூலை எழுத வேண்டியேற்பட்டது. 

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத் திக்கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக் கருக்கள் புத