Book Type (புத்தக வகை) : வரலாறு
Title (தலைப்பு) : தமிழரின் தோற்றமும் பரம்பலும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-07-03-043
ISBN : 978-955-1857-42-4
EPABNo : EPAB/02/18591
Author Name (எழுதியவர் பெயர்) : வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 116
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 240.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

தமிழரின் தாயகம் பற்றிய அரிய நூல் வரலாற்றறிஞர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த ஆங்கில நூல் ( Origin and Spread of the Tamils )      இதனை அறிஞர் பி.இராமநாதன் ‘தமிழரின் தோற்றமும் பரவலும்” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார். 

1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் ’தமிழரின் தோற்றமும் பரவலும்” பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகளும் 1947ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழரின் தாயகம் தென்னாடே. இங்கிருந்தே பழந்தமிழ (திராவிட) நாகரிகம் சிந்துவெளி, சுமேரியம், எகிப்து ஆகிய பகுதிகளுக்குப் பரவியது என்பது அப்பொழிவுகளின் முடிவு. இப்பொழிவுகளுக்கான அடிக்குறிப்புக்கள் 47 பக்கங்களில் தரப்பட்டன. 1940களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த பல்துறை நூல்களிலிருந்து அப்பொழிவுகளின் முடிவுக்கான விரிவான ஆதாலரங்களை அக்குறிப்புக்கள்   தந்தன.  தீட்சிதரின் முடிவுகள் 1940-2006 கால அளவில் வேறு துறைகளில் ஏவப்பட்டுள்ள வளர்ச்சி நிலைகளின்படி எவ்வாறு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை முன்னுரையில் காணலாம்.
Full Description (முழுவிபரம்):

'உலக முதற்றாய் மொழி தமிழே' என்று வலுவாக நிறுவியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்கள் மாந்த நாகரிக வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியிருக்கின்றது. என்று அவர் கூறுவார். அவர் போற்றிய வரலாற்று அறிஞர்களுள் ஒருவர் வீ. ஆர்.இராமசந்திர தீட்சிதர். தமிழரின் தோற்றம் பரவல், நாகரிகம் பற்றி போலியான ஆதாரங்களைக் காட்டியோ காழ்ப்புணர்வுடனனோ சில வரலாற்றிஞர்கள் வம்படி வழக்காடல்கள் செய்தனா, செய்து வருகின்றனர். 
ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் இத்தகைய பொய்யுரைகளைத் தோலுரித்துக் காட்டும் மெய்யான முயற்சிகளும் நடந்துவருகின்றன. அவ்வகையில் அறிஞர் வி. ஆர் இராமச்சந்திரனார் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி அது ஆங்கிலத்திலேயே The Origin and Spread of the Tamils  என்று நூலாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதை நம் காலத்தில் வாழும் வரலாற்று ஆய்வாளர பாவாணர் வழியிலே ஆய்வு நடைப்போடும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அருமையாக தமிழாக்கம் செய்துள்ளார் அதுவே உங்கள் கையில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் இச்சிறு நூல். 
அறிஞர் வி.ஆர் இராமசந்திரனார் 'தமிழர் தென்னிந்தியாவின் தொல்குடிகளே அவர்கள் மெசபத்தோமியாப் பகுதியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் என்று சில அறிஞர்கள் கூறுவது தவறு  தொல்தமிழரே தென்னிந்தியாவிலிருந்து உலகெங்கும் பரவினர் சிந்துவெளி , எலாம், சுமேரியா, எகிப்து போன்ற பண்டை நாகரிகங்களை எல்லாம் உருவாக்கியவர்கள் இங்கிருந்து அங்கு பரவிய தமிழர்களே!' என்ற உண்மைகளை ஆணித்தரமான சான்றுகளுடன் இச்சிறு நூலில் நிறுவுகிறார். சொற்பொழிவு என்பதால் நூல் நாற்பது பக்கங்களில் சுருக்கியுள்ளார். ஆனாலும்சுறுக்கச் சொல்லி விளங்க வைத்தல் முறையில் 59 கருத்துகளாக நூலினுல் தரப்பட்டுள்ளது. 
இன்றைக்கு இங்குள்ள அரசியல், இனவியல் தாக்கங்களினால் உண்மையான முழு அளவிலான ஆய்வுகள், அகழ்வாய்வுகள் நடத்தப்படவில்லை. தொன்மத்தில்  கூறப்படும் சரசுவதி ஆறு இதுதான் என்று அகழ்வாய்வு செய்து போலியாகக் காட்டப்பட்ட நிலையை சில ஆண்டுகளுக்கு முன் கண்டோம் கிடைத்திருக்கிற சில ஆதாரங்களே இருளைக் கிழித்துக் கொண்டு கதிரொளி வெளி கிளம்புவது போல் தமிழர் தோற்றம், பரவல், நாகரிகப் பண்பாட்டுக்கு அச்சாரமும் ஆணிவேருமாக நிற்கின்றன. இன்னும் உண்மையான அகழ்வாய்வுகள் தரையிலும் கடலிலும் இங்கு நடத்தப்படும் பொய்மையாளரும், எதிரிகளும், இரண்டகர்களும் தங்கள் தூவலின் முனையை முறித்துத் தூக்கிப் போட்டுவிட்டு வாயைப் பொத்திக் கொண்டு தலைத்தெறிக்க ஓடும் நிலை கட்டாயம் ஏற்படும். 
மூன்று மாதங்களுக்குமுன் மயிலாடுதுறை செம்பியன் கண்டியூரில் திரு. வி. சண்முகநாதன் அவர்கள் கண்டெடுத்த புதுக்கற்காலக் கருவியில் இருந்த சிந்துவெளி, எழுத்துக்களை அறிஞர் ஐ. மகா தேவன் அவர்கள் 'முருகு அன்'  (முருகன்) என்று படித்துள்ளார். அக்கருவியின் காலம் கி.மு 2000-1500 ஆகஇருக்கலாம் என்று அவர் கருதுகிறார். சிந்துவெளி மக்களும், தமிழ் மக்களும் ஒரே மொழியையே (தமிழ்) பேசினர் என்பதை இக்கண்டுப்பிடிப்பு நிறுவுவதாகவும் தெரிவித்துள்ளார். (1.5.2006 இந்த நாளிதழ்)
மேலும் அறிஞர் வி. ஆர். இராமச்சந்திரனார் அவர்கள் இந்நூலில் சில வியப்பான செய்திகளையும் தருகிறார். எடுத்துக்காட்டாக க.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் இங்கிருந்து மயில்களை இறக்குமதி செய்தனர் என்ற செய்தியைக் கூறலாம். மயிலாடுதுறை என்றும், மயிலம் என்றும் மயில் ஆர்க்கும்ஊர்; (மயிலாப்பூர்) என்றும் அழைக்கப்படும் ஊர்களில் கூட இன்று மயில் இல்லை என்றே கூறலாம். ஆனால் மயில்கள் ஏற்றுமதிச் செய்தியை நம்பக்கூடிய சான்றாக 
'பீலிபெய்  சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுந்துப் பெயின்' 
என்னும் குறள் அமைகிறது. இன்னும் சொல்வதென்றால் திருவள்ளுவர் இக்குறளில் 'மயில் இறகை ஏற்றிய வண்டி' என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முன் உவமையாகக் கூறப்பட்ட இந்த வரலாற்றுச் செய்தியும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கதாகும். உதிர்ந்த மயிலிறகுகளே இந்த அளவு என்றால் மயில்கள் ஏற்றுமதி என்பதை நம்பாமலிருப்பதோ ?
சூயசு கால்வாய் செய்தியும், சீனாவில் சென் மதம் தோன்றக்காரணம் காஞ்சிப்புரத்திலிருந்து  அங்குச் சென்ற ஓர் அரசக்குமரன் என்ற செய்தியும் இன்னும் இது போன்ற செய்திகள் நூலினுள்ளே நனமுத்துகளாளக் கோக்கப்பட்டுள்ளன. தமிழநாகரிகத்தின் அடிப்படை ஒருமைப்பாட்டைத் தெளிவாக நிறுவும் பல்வேறு செய்திகள் நூலினுல் புதைந்துக் கிடக்கின்றன. கலைகள், கைத்தொழில்கள், சமயம்  முதலிய துறைகளில் பண்டைய உலகிற்கு நாகரிகக் கொடை நல்கியது. நம் பழந்தமிழ் இனமே என்பதை நிலை நிறுத்தும் நூலிஃது . 
தென்னிந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்த கடல் கொண்ட தென்நாடுதான் தமிழரின் தாயகம் என்றுரைக்கும் அறிஞர்; வி. ஆர். இராமச்சந்திரனார், ஓமர் எழுதிய இலியது பாவியத்தை இடையறாது தன் மனதில் கொண்டிருந்த டாக்டர் சிலிமன் தன் அகழ்வாய்வுகளால் ட்ராய், மிசினே, டிரன்சு முதலிய நாகரிகச்சின்னங்களை வெளிக்கொணர்ந்ததை விடவும்வியப்பை விளைவிக்கும் சின்னங்கள் தமிழக பகுதிகளில் விரிவான அகழ்வாய்வில் கிடைக்கும் என்ற தன் தணியாத தாகத்தை வெளியிடுகிறார். அவரது ஏக்கத்தை தீர்க்கும் திசை நோக்கி நாம் செல்ல வேண்டிய குறிகோல் நம்மிடம் குடிகொள்ள வேண்டும். என்று பெருவிருப்பத்துடன் இந்நூலை வெளியிடுகிறோம். இருள் விலகட்டும்! உண்மைகள் வெளிவரட்டும். தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!
இந்நூலினைத் தமிழாக்கமாயத் தந்திருக்கும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் மூலநூலின் கருத்து சிதையாமல் சூடும் சுவையும் குன்றாமல் அதைச்செய்திருக்கிறார். அது மட்டுமின்றி 41 பக்க நூலுக்கு 27 பக்கங்களில் முன்னுரையும் தந்துள்ளார். அறிஞர் வி. ஆர். இராமச்சந்திரனாரின் முடிவுகளை அவர் காலத்துக்குப் பின்னர். நிகழ்ந்த மாந்தனின் தோற்றமும் பரவலும் பற்றிய இன்றைய அறிவியல் முடிவுகளும் அண்மையில் நடந்த அகழ்வாய்வுகள் 'சிந்துவெளி எழுத்துக்கள் தொல்தமிழே' என்ற இன்றைய வல்லுநர் முடிவுகளும் ஆதரிப்பதை அழகுப்படத்  தொகுத்து ஆணித்தரமாக நம்முன் வைத்துள்ளார். இம் முன்னுரையை அரிதின் முயன்று மிகவும் பாடுபட்டு மேலாய்வு ஆராய்ச்சியுரையாக எழுதியிருக்கிறார் என்பதை முன்னுரையில் உள்ள செய்திகளும் புள்ளி விளத்தங்களும் நமக்குப் புரிய வைக்கின்றன. மேலும் முன்னுரைக்கான ஆதார நூற்பட்டியலே மூன்று பக்கங்கள வருமளவுக்கு உள்ளதைக் காணும்போது முன்னுறையின் சிறப்பு தௌ;ளிதின் புலப்படும் அன்னார்க்கு எம் நனி நன்றி மிகவும் உரித்தாகுக!
'மொழிமுகப்பு'எனும் தலைப்பில் சொல்லாக்க அறிஞர் முனைவர். கு. அரிசேந்திரன் மிகச் சிறந்த ஆய்வு முகப்புரையை இந்நூலுக்கு வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார். இவர் தென்மொழி மரபினர். பாவாலரேறு பெருஞ்சித்திரத்தினார், மொழிஞாயிறு பாவாணர் வழி சித்திக்கும் தனித்தமிழரிஞர். மொழி இன மேன்மைக்;கு உழைத்துவரும் இவ்வறிஞரின் ஆய்வுரையைப் பதிவு செய்வதில் பெருமைப்படுகிறோம். இவருக்கு எம் நன்றி. 
பதிப்பாளர்.