Book Type (புத்தக வகை) : அரசியல்
Title (தலைப்பு) : அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடும் அரசியல் செயல்முறையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-01-02-062
ISBN : 978-955-1857-61-5
EPABNo : EPAB/02/18812
Author Name (எழுதியவர் பெயர்) : தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 156
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் இல்லை
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

அணிந்துரை
முகவுரை
நன்றியுரை
பதிப்புரை
பொதுக் கொள்கை வகுத்தலும்,பொதுநிர்வாகமும்
  1. பொதுக் கொள்கை
  2. பொதுநிர்வாகவியலின் இயல்பு
  3. பொது முகமைத்துவம்
மோதலும்;,மோதலைத் தீர்த்தல் தொடர்பான எண்ணக்கருக்களும்
  1. மோதலை விளங்கிக் கொள்ளல்
  2. மோதலும், வன்முறையும்
  3. மோதலும், அகிம்சையும்
  4. மோதலைத் தடுத்தல்
  5. மோதலைத் தீர்த்தல்
  6. மோதல் முகாமைத்துவம்
  7. மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம்
  8. சமாதானக் கற்கை
சர்வதேச அரசியலை விளங்கிக்கொள்ளல்;
  1. சர்வதேச அரசியல்
  2. வெளிநாட்டுக் கொள்கை
  3. யுத்தம்
  4. கூட்டுப்பாதுகாப்பு
  5. அதிகாரச் சமநிலை
  6. சர்வதேசச் சட்டம்
  7. ஆயுதக்கட்;டுப்பாடும், ஆயுதக்களைவும் 
Full Description (முழுவிபரம்):

அரசியல் நடவடிக்கை பரந்த சமூக முறையின் பிரிக்க முடியாத பகுதியாகும். இதனால் அரசியல் விஞ்ஞானம் உறுதியாக சமூக விசாரணை என்ற பரந்த பரப்பில் நிலைகொண்டிருக்கின்றது என லாம். சமூக விஞ்ஞானங்கள் சமூகக் குழுக்களின் மனித நடத்தை தொடர்பான விடயங்கள் பற்றிய கற்கையினை ஏதோவொரு வகை யில் கவனத்தில் கொள்கின்றன. சமூகவியலாளர்கள் ஒரே விதமான தகவல்களைச் சேகரித்து ஒரேவிதமான கருதுகோள்கள், கோட்பாடு களின் அடிப்படையில் ஒரேவிதமான கண்டுபிடிப்புகள் அல்லது முடிவுகளுக்கு வருகின்றனர். விஞ்ஞான ரீதியான விசாரணையின் நோக்கம் மனப்பதிவுக்கு அறிவைப் பதிலிடுதலாகும். விஞ்ஞானம் நம்பிக்கையான அறிவைத் தேடுகிறது என்ற அடிப்படையில்  என்ன நடந்தது?  என்ன நடக்கிறது? என்பவைகளை எதிர்வு கூறவும் முடியும்.
அண்மைக்கால சிந்தனையாளர்கள் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசின் கொள்கை உருவாக்கம் அதனை நடைமுறைப்படுத் தல், மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்வு என்பனவற்றை யும் கவனத்தில் கொள்ளுமொரு கற்கைநெறி என்றும் விளக்கமளிக் கின்றனர். மேலும் அரசியல் விஞ்ஞானிகள் அரசாங்கத்தின் வரவு செலவுத் தீர்மானங்களை விளங்கிக் கொள்ளுவதற்குப் பொருளாதாரத் தரவுகளைப் பயன்படுத்துவது அவசியம் என்பதையும் ஏற்றுக் கொண் டுள்ளனர். இதற்காகப் பொருளியலாளர்களின் கோட்பாடுகளைக் கடன்வாங்க ஆரம்பித்துள்ளனர். மேற்குறிப்பிட்ட சகல விடயங்களும் இறுதியாக அரசுடன் தொடர்புபடுகின்றதுடன், எந்தவொன்றும் அரசி லிருந்து விடுபடாமல் அரசைமையமாகக் கொண்டு பல்வேறு திசை களில் பரவியுள்ள துணைப்பிரிவுகளுமாகும். அரசியல் கல்வி ஆளு பவர்களுக்கும், ஆளப்படுகின்றவர்களுக்கும் பயன்படுகின்றதுடன், பொதுவிடயங்களை நிருவகிக்கும்போது பின்பற்ற வேண்டிய கோட் பாடுகளையும் அரசியல் கல்வி போதிக்கின்றது. அரசியல் கல்வியா னது நிருவாகிகள் தங்களுக்கு வழிகாட்ட வேண்டிய கோட்பாடு களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகின்றது. அரசியலறிவில்லாத நிருவாகி நாட்டின் நிருவாகத்தைத் திறமையாகவும், ஒழுங்காகவும் நடத்துவது கடினம். எனவேதான் நிருவாகத்தில் திறமையை ஏற்படுத்தி நிருவாகி போதிய அரசியல் அறிவைப் பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்படுகின்றது. அரசியல் விழிப்புணர்வுடைய மக்களால்தான் நேர்மையான அரசாங்கத்தை ஆதரிக்கவும் முறை கேடான அரசாங்கத்தை எதிர்க்கவும் முடியும். மக்கள் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டத்தவறினால் அரசியல் நிருவாகிகள் தங்கள் கடமைகளை நேர்மையாகவும் திறமையாகவும் செய்யமாட்டார்கள். எனவே மக்கள் பெற்றுள்ள அரசியல் விழிப்புணர்வுப் பரிமாணாமே ஒரு நாட்டு அரசாங்கத்தின் சிறந்த பரிமாணமாகும்.
சமகாலத்தில் அரசியல் விஞ்ஞானக் கல்வியின் முக்கியத்துவம் அதிகளவு உணரப்பட்டு வருகின்றது. ஏனெனில் அரசியல் விஞ்ஞானக் கல்வி தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை பரவலாக ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோவொரு வகையில் நாளாந்த அரசியலோடு தொடர்புபடுகின் றான். மக்கள் ஒவ்வொருவரும் அரசாங்கம், பாடசாலை, கோயில், வர்த்தகம், அரசியற்கட்சிகள் போன்றவற்றின் அரசியல் நடவடிக்கை களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொள்கின் றனர். எனவே மனிதனின் அன்றாட வாழ்க்கையுடன் அரசியல் என்பது தொடர்புபட்டு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாய் மாறி விட்டது. 
இவ்வகையில் இந்நூலின் முதல் அத்தியாயம் பொதுக் கொள்கை வகுத்தலும், பொதுநிர்வாகமும் என்னும் பிரதான தலைப் பின் கீழ் தாயாரிக்கப்பட்டுள்ளது. இவ் அத்தியாயத்திற்குள் பொதுக் கொள்கை, பொது நிர்வாகவியலின் இயல்பு, பொது முகாமைத்துவம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
இரண்டாவது அத்தியாயத்திற்குள் மோதலும், மோதலைத் தீர்த்தல் தொடர்பான எண்ணக்கருக்களும் என்னும் பிரதான தலைப் பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் மோதலை விளங்கிக் கொள்ளல், மோதலும் வன்முறையும், மோதலும் அகிம்சையும், மோதலைத் தடுத்தல், மோதலை நீடித்தல், மோதல் முகாமைத்துவம், மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம், சமாதானக் கற்கை போன்ற விடயங் கள் எழுதப்பட்டுள்ளன. 
மூன்றாவது அத்தியாயம் சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்ளல் என்னும் பிரதான தலைப்பின் கீழ் எழுதப்பட்டுள்ளது. இதற்குள் சர்வதேச அரசியல், வெளிநாட்டுக் கொள்கை, யுத்தம், கூட் டுப்பாதுகாப்பு, அதிகாரச் சமனிலை, சர்வதேசச் சட்டம்,  ஆயுதக் களைவும் என்பவைகள் தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. க.பொ.த (உ.த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான புதிய பாட விதானத்தினை கவனத்திலெடுத்து இந்நூல் எழுதப்பட்டு;ள்ளது. புதிய பாடவிதானத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பல விடயங்கள் இந்நூ லில் எழுதப்பட்டுள்ளதுடன், இது க.பொ.த (உ.த) மாணவர்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையுமுள்ளது. புதிய பாட விதானத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பான மூன்றாவது நூலினை விரைவில் வெளியிட முடியும் என நம்புகின்றேன். இந்நூல் தொடர்பான விமர்சனங்களை பெரு மனதுடன் வரவேற்பதுடன் இந்நூலை மேலும் வளப்படுத்த இது உதவும் என்றும் நம்புகின்றேன்
த.கிருஷ்ணமோகன்
கேரதீவு வீதி
நாவற்குழி    .