புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்

உலகக் கல்விப் பரப்பிற் கல்வியியல் தொடர்பான மரபுவழிக் கருத்துக்களையும் மாற்றுக்கருத்துக்களையும் அறிந்துகொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் இந்நூலாக்கம் முகிழ்த்துள் ளது. இவ்வாறான ஒரு நூலின் தேவையைக் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நண்பர் பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களும் என்னிடத்துக் கூறியதுடன் ஆக்க முயற்சிக்குக் காணும் போதெல்லாம் ஊக்கம் தந்தனர். இந்நூலாக்கத்துக்கு வேண்டிய உசாவல் நூல்களை அவர்கள் தந்துதவியவேளை, தேசிய கல்வி நிறு வகத்திலிருந்து மேலும் பல நூல்களை நண்பர் கலாநிதி உலகநாதர் நவரத்தினம் அவர்களும், கல்வி அமைச்சிலிருந்து நண்பர் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களும் தேடிவந்து தந்தனர். இந்நண் பர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். கல்வியியலில் மாற்றுச் சிந்தனைகளின் தேவையை நூல் வடிவிலே தரும்படி வேண்டிக் கொண்ட நண்பரும் 'கூடம்', 'அகவிழி', 'ஓலை' ஆகிய மூன்று சஞ்சிகைகளின் ஆசிரியருமாகிய தெ.மதுசூதனன் அவர்கள் உற்சாகம் தரும் நண்பராகி இயங்கிக் கொண்டிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 
இத்துறையில் வளமான ஊக்கலைத் தந்துகொண்டிருக்கும் நண்பரும் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அதிபருமாகிய கலாநிதி த.முத்துக்குமாரசாமி அவர்களும் மிக்க நன்றிக்குரியவர். இந்நூலை வெளியிடும் சேமமடு வெளியீட்டு நிறுவனத்தினர் நன்றிக்குரியவர்கள். 
இந்த இரண்டாம் பதிப்பை மேலும் திருத்தங்களுடன் வெளியிடப்படுவதற்குரிய ஊக்கங்களைத் தந்த நண்பர்களுக்கு நன்றி.
சபா .ஜெயராசா


மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர