Full Description (முழுவிபரம்): |
பாடசாலைக் கல்வியின் அவசியம், முக்கியத்துவம் என்பன பற்றிபொதுவாக மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர். அது பற்றி அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு உண்டு என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதனை எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய குறிகாட்டி ஆரம்ப, இடைநிலைக் கல்விநிலையில் காணப்படும் உயர்ந்த மாணவர் சேர்வு வீதமாகும். ஆரம்பக்கல்வி நிலையில் இவ்வீதம் 100 ஐ அண்மித்து விட்டது.
எவ்வாறாயினும் இன்று எழுச்சி பெற்றுவரும் அறிவுப் பொருளாதாரம், அறிவுச் சமூகம் போன்ற சிந்தனைகள் பாடசாலைக் கல்வியோடு உயர்கல்வியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றன. அறிவுப் பொருளாதாரம் உலகளாவிய அறிவை உள்வாங்குதல், புதிய அறிவை உருவாக்குதல், அறிவைப் பொருளுற்பத்திக்குப் பயன்படுத்தல், அறிவை சேமித்து முகாமை செய்தல் போன்றவற்றை வலியுறுத்துவதால் பல்கலைக்கழகக்கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. யாவருக்கும் பாடசாலைக் கல்வி என்பது போல் யாவருக்கும் உயர்கல்வி என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. மேலைநாடுகளில் இளைஞர்களில் 60-80 சதவீதமானவர்கள் உயர்கல்வியில் பங்கு பெறுவதால் அங்கு உயர்கல்வி வெகுஜனமயமாகி விட்டதாகக் கூறப்படுகின்றது. உயர்கல்வியில் ஆயளள hiபாநச நனரஉயவழைnஇ ஆயளளகைiஉயவழைnஇ னநஅழஉசயவணையவழைn என்னும் எண்ணக்கருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மரபுவழி உள்வாரிப் பல்கலைக்கழகங்கள் இவ்வாறான விரிவான உயர்கல்வியை வழங்க முடியாது என்பதால் இன்று விரிவான தொலைக் கல்வி ஏற்பாடுகளும் இணைய வழி உயர்கல்வியும் ஊக்குவிக்கப்படு கின்றன. இப்புதிய நிறுவனங்களில் இலட்சக்கணக்கானவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். உயர் குழாத்தவருக்கு மட்டுமே உயர்கல்வி என்று சிந்தித்த காலம் இன்று மலையேறிவிட்டது.
இவ்வாறான உலகளாவிய உயர்கல்வியின் விரிவாக்கத்துடன் அத்துறையில் ஏராளமான புதிய செல்நெறிகள் எழுந்துள்ளன. இதற்குப் பல உதாரணங்களைக் கூறமுடியும். உலகில் சிறந்த பல்கலைக் கழகங்களை ஏற்படுத்தும் உற்சாகம் செல்வந்த நாடுகளில் மட்டுமன்றி வளர்முக நாடுகளிலும் காணப்படுகின்றது. அதற்கான சரியான தகுதிவிதிகள் எவை என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் கலந்தாய்வு செய்யப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள் தமக்கு அப்பால் உள்ள கைத்தொழில், வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தனியார் துறைப் பல்கலைக்கழகங்கள் இல்லாத நாடுகளில் அவற்றை அமைப்பது பற்றி சிந்திக்கப்படுகின்றது.
இவ்வாறு உயர்கல்வி தேசிய, சர்வதேசிய ரீதியாக முக்கியத்துவம் பெற்று அரசின் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தைக் கவர்ந்து வரும் இந்நாளில், உயர்கல்வியின் நவீன செல்நெறிகள் பற்றி யாவரும் அறிந்துகொள்ள வேண்டிய தேவையொன்றுண்டு. இத்தேவையைக் கருத்திற் கொண்டு உயர்கல்வி பற்றிய சிந்தனைகளையும் செல்நெறிகளையும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்குடன் இந்நூல் எழுதப்படுகின்றது.
இந்நூலாக்கத்துக்கு உரிய உற்சாகத்தை வழங்கிய சேமமடு பதிப்பக உரிமையாளர் திரு.பத்மசீலன் அவர்களுக்கும் ஆசிரியம் சஞ்சிகை ஆசிரியர் தெ.மதுசூதனன் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
பேராசிரியர்
சோ.சந்திரசேகரன
|
ஏனைய பதிப்புக்களின் விபரம் |
Content (உள்ளடக்கம்): |
1. இலங்கையில் உயர் கல்வியில் புதிய போக்குகள்
2. இலங்கையின் உயர்கல்வியின் எதிர்காலம்
3. இலங்கையின் பல்கலைக்கழகக சில புதிய போக்கு
4. இலங்கை பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள்
5. உயர் கல்வியின் உலகமயமாக்கல்
6. தனியார் உயர் கல்வி உலகலாவிய செல்நெறிகள்
7. உயர் கல்வியின் வெகுசன மயமாக்கல்
8. சீன பல்கலைக்கழகங்கள் நாடும் வெளிநாட்டு பேராசிரியர்கள்
9. உலகளாவிய ரீதியில் பல்கலைக்கழக ஆசிரியர் பெறும் சம்பளம்
10. புதிய தென்னாசிய பல்கலைக்கழகங்கள்
11. உலகலாவிய பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தும் செயற்பாடு
12. மெய்நிகர் பல்கலைகழகம்
13. உலகின் அதிசிறந்த பல்கலைகழகங்கள்
14. மேற்கு நாடுகளில் மாறிவரும் பாடசாலைகள்
15. சர்வதேச கல்விச் செல்நெறிகள்