கற்றல் உளவியல் |
வளர்ந்து விரிந்து வியாபித்து வரும் கல்விச் செயற்பாடுகள் கல்வி உளவியலின் தேவையை மீள வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. அறிவுப் பெருக்கை அனைத்து மாணவர்க்கும் ஆழத்துடனும் செறிவுடனும் கையளிப்பதற்குக் கற்றல் உளவியல் பல நிலைகளிலும் பல பரிமாணங்களிலும் துணைசெய்ய வல்லது. கற்றல் உளவியலின் கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளை மீளாய்வு செய்வதற்குரிய தேவையை நண்பர்கள் அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.
|