Book Type (புத்தக வகை) : புவியியல்
Title (தலைப்பு) : பௌதிகப் புவியியல்:புவியின் அமைப்பும் அகச்செயன்முறையும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-08-01-137
ISBN : 978-955-685-036-9
EPABNo : EPAB/02/18596
Author Name (எழுதியவர் பெயர்) : எஸ்.அன்ரனி நோர்பேட்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 166
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

(1)    பௌதிகப் புவியியல்: ஓர் அறிமுகம்    01
(2)    புவியின் உட்பாக அமைப்பு      14
(3)    கனிப்பொருட்களும் பாறைகளும்      29
(4)    அடையற் பாறைகளின் தோற்றமும் வகைகளும்     52
(5)    உருமாறிய பாறைகளின் வகைகள்    63
(6)    கண்டங்களின் நகர்வும் சான்றுகளும்    72
(7)    தகட்டோட்டக் கோட்பாடும் கடல்-தரை பரவுதலும்     86
(8)    எரிமலைகளின் செயற்பாடும்நிலவுருவங்களும்     111
(9)     புவிநடுக்கங்கள்     130
(10) வானிலையாலழிதல்     157
    ஆய்வுத்துணைகள்    165

 

Full Description (முழுவிபரம்):

புவியானது இன்று வானவெளியிலிருந்து அவதானிக்கப்படுவது மட்டுமன்றி அதன் சமுத்திரத் தரைகள், தரையுயர்ச்சி மற்றும் அமைப்புக்கள் என்பவற்றையும் மிகத்தெளிவாக அவதானிக்கும் அளவிற்கு விஞ்ஞான ரீதியாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புவியின் தோற்றம் அதன் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்வதற்கான எமது திறன்கள் விருத்தியடைந்துள்ளதுடன் புவியின் வடிவமைப்புக்குக் காரணமான சக்திகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஓர் இயக்கவியல் தொகுதியாக பூமி எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எரிமலைகள், புவிநடுக்கங்கள், மலையாக்கம், கண்ட நகர்வு என்பன புவியின் உட்பகுதி வெப்பத்தின் வெளிப்பாடெனத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொருத்தமான கருவிகளும், தொழில்நுட்பமும், சான்றுகளும் புவியினைப் பற்றிய எமது விளங்கிக் கொள்ளலை மேலும் அதிகரித்துள்ளது. பௌதிகப் புவியியலுக்கான ஓர் அறிமுகத்துடன் ஆரம்பமாகும் இந்நூலின் உள்ளடக்கத்தில் புவியின் உட்பாகம், கனிப்பொருட்களும் பாறைகளும், கண்ட நகர்வு, எரிமலைகளின் செயற்பாடுகள்; அவற்றினால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள், புவிநடுக்கங்கள் மற்றும் வானிலையாலழிதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
புவியியல் பாடத்தினைப் பரீட்சை நோக்கிலன்றி, அதனை ஆழமாகப் பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் மாணவர்கள் விளங்கிக் கொள்ளும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தரமான நூல்களின் பற்றாக்குறை முக்கியமானதொரு குறைபாடாகக் காணப்படுகின்றது. இலங்கையின் பாடசாலை முறைமையைப் பொறுத்தவரை வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகப் புவியியலைக் கற்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்றைய கல்விமுறையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுய கற்போராக விருத்தி பெற வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைக் காணலாம்.
    புவியியலின் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப் பாட நூல்களின் பற்றாக்குறையானது புவியியல் மாணவர்களினால் இன்று நன்கு உணரப்பட்டுள்ளது.  அத்துடன் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்று வரும் புதிய அறிவுத்தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அவசியத் தேவையையும் கொண்டுள்ளனர். இப் பின்புலத்திலேயே கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் 'பௌதிகப் புவியியல்: புவியின் அமைப்பும் அகச் செயன்;முறையும்;'  என்னும் தலைப்பில் இந்நூலை எழுத முற்பட்டோம். முன்னர் வெளிவந்த 'பௌதிகப்புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்' என்ற நூலின் இரண்டாவது பகுதியாக இது அமைகின்றது.
    புவியின் அகச்செயன்முறைகள் மற்றும் அதனால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள் சார்ந்த விடயங்களை  விஞ்ஞான ரீதியாக மாணவர்கள்  கற்று விளங்கிக் கொள்வதற்கான ஒரு தேவையை இந்நூல் நிறைவு செய்யும் எனக் கருதுகின்றோம். உயர்தர மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக புவியியல் மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளோம்.

எஸ்.அன்ரனி நோர்பேட்
பேராசிரியர்
புவியியல் துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்
கொழும்பு – 03