Full Description (முழுவிபரம்): |
ஆசிரியர்களுக்கான தொழில்முறைக்கல்வி 'கல்வியியல்' எனப் பொதுவாகச் சுட்டப்பட்டாலும் அதில் ஏராளமான துணை நெறிகள் உண்டு. கல்வி உளவியல், கல்விச் சமூகவியல், பொதுக்கற்பித்தலியல், கல்வி மதிப்பீடு, கல்வித்தத்துவம் எனப் பலவாறாக விரிந்து செல்லும் கல்வியியலின் ஒரு பிரதான துணைப்பிரிவு 'ஒப்பியல் கல்வி' ஆகும். உலக நாடுகளின் கல்வி முறைகளின் போக்குகள், வளர்ச்சிகள் என்பன இதில் முறையாக, வரலாற்று ரீதியாக ஆராயப்படுவதும் அவ்வாறான போக்குகளுக்கும் வளர்ச்சிகளுக்குமான காரணங்கள், அவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் பற்றிய ஆய்வு ரீதியான நோக்கு இக்கற்கை நெறியின் உள்ளடக்கமாகும்.
ஆசிரியர்கள் மட்டுமன்றி இலங்கையின் கல்விமுறை தொடர்பாகக் கொள்கையாக்கம் மற்றும் சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அறிஞர்களும் ஒப்பீட்டுக்கல்வியில்; ஆர்வம் கொண்டவர்கள்; இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய நிதானமான மதிப்பீட்டைச் செய்ய, ஏனைய வளர்முக நாடுகள், குறிப்பாக அயலில் உள்ள தென்னாசிய, தென்கிழக்காசிய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்விமுறை பற்றிய அறிவும் தெளிவும் தேவை. இவ்வாறான பின்புலத்திலேயே இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகளைச் செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான கொள்கைகள், சீர்திருத்தங்கள் தொடர்பாகக் காத்திரமாக சிந்திக்க முடியும்.
இவ்வகையில், உலக நாடுகளின் கல்வி மற்றும் இலங்கையின் கல்வி வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் ஆசிரியர்களுக்கும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் மற்றோருக்கும் பயன்படும் என நம்புகின்றோம்.
இன்று இலங்கையின் பாடசாலைக் கல்வியின் தராதர மேம்பாடு, பாட ஏற்பாட்டு மாற்றங்கள், பாடசாலை அனுமதிக்கான கொள்கை, உயர்கல்வியின் எதிர்கால வளர்ச்சிக்கான கொள்கை உருவாக்கம் தொடர்பாகப் பல அரசமட்டக் குழுக்கள் நியமிக்கப்பட்டு கருத்தாடல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவற்றுக்கு உதவக்கூடிய ஒரு கல்வியியல் துறையே ஒப்பியல் கல்வியாகும். இத்துறை சார்ந்த நூல் ஒன்றை எழுதி வெளியிட பேரூக்கத்துடன் உழைத்துவரும் 'அகவிழி' சஞ்சிகை ஆசிரியர் தெ.மதுசூதனன் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் இந்த நூலை வெளியிட முன்வந்திருக்கும் சேமமடு பதிப்பக உரிமையாளர் நண்பர் பூ.பத்மசீலன் அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது ஆசிரிய மாணவர்களும் மற்றும் கல்வித்துறை சார்ந்த ஆர்வலர்களும் இத்தகு நூல்களை வாங்கி வாசித்து பயன்பட வேண்டுமெனவும் வாழ்த்துகின்றோம்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
பீடாதிபதி, கல்விப்பீடம் ,
கொழும்புப் பல்கலைக்கழகம.;
|
ஏனைய பதிப்புக்களின் விபரம் |
Content (உள்ளடக்கம்): |
பொருளடக்கம்
பகுதி - I
- சிறந்த கற்பிதற் செயற்பாடுகள்
- சமூகத்துக்குப் பயனுடைய கல்விநிலை எது ? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன ?
- பெண் கல்வி, அபிவிருத்தி ஆய்வு முடிவுகள்
- பாடசாலை மாணவர்களின் வீட்டுப்பணி - பயனுள்ள சில ஆய்வு முடிவுகள்
- பாடசாலைப் பிள்ளைகளின் நடத்தைப் பிரச்சனைகள்
- எமது பிள்ளைகளின் கற்றல் பணிகள்
பகுதி - II
- இன்றைய பாடசாலை பற்றிய சில விமரிசனங்கள்
- வீழ்ச்சியடைந்துவரும் அரசாங்கப் பாடசாலைகளின் தொகை
- எதிர்காலவியல் நோக்கில் பாடசாலைகள்
- பாடசாலைக் கல்வியின் புதிய நோக்கங்கள்
- புதிய நூற்றாண்டில் மாற்றங்காணும் பாடசாலைகள் ஐ.அமெரிக்காவின் முன்மாதிரி
- பல்கலைக்கழக் கல்வியில் அண்மைக்கால மாற்றங்கள்
- உலகின் அதிசிறந்த பல்கலைக்கழகங்கள்
பகுதி - III
- தனியார் உயர் கல்வி, சில சர்வதேசப் போக்குகள்
- உலகெங்கும் பாராட்டப்படும் ஜப்பானியக் கல்வி ஏற்பாடுகள்
- உயர்கல்வியின் உலகமயமாக்கம்
- மாறிவரும் உலகில் கல்வியும் பண்பாடும்
- குறைதீர் பாரபட்சம்
பகுதி - IV
- இலங்கையின் சமூக இணக்கத்திற்கான உலக வங்கியின் ஆலோசனைகள்
- உலக வங்கியின் கல்விக் கொள்கைகள் பற்றிய விமரிசனங்கள்
- இலங்கையின் கல்வி வளர்ச்சியும் உலக வங்கியின் பரிந்துரைகளும்
பகுதி - V
- இந்தியா எங்கே செல்கிறது
- இந்தியாவில் விஞ்ஞானிகள் பற்றாக்குறை
- இந்தியாவில் விஞ்ஞானம் கண்டுவரும் வீழ்ச்சி
- இந்தியக் கல்விமுறை பற்றிய இந்திய அறிஞர்களின் விமரிசனங்கள்
- இந்தியக் கல்விமுறையில் சமயச்சார்பின்மை
- இந்திய அறிவு ஆணைக்குழு