புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியில் புதிய தடங்கள்

இன்று கல்வியியல் துறையில் பல்வேறு புதிய புதிய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏனைய அறிவுத் தொகுதிகளுடன் ஒப்பிடும்பொழுது கல்வியியல் எழுத்துக்கள் அதிகம். இதற்குக் காரணமானவர்களாக இருப்போரில் பேராசிரியர் சோ.சந்திரசேகர னும் குறிப்பிடத்தக்கவர்.
உலகளாவிய ரீதியில் கல்வித் துறையில் இன்று பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை தமிழ் வாச கர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் ஆக்கங்களாக வெளிவருகின்றன. இவ்வாறு ஆக்கம்பெற்ற பதினாறு கட்டுரைக ளைத் தொகுத்து 'கல்வியில் புதிய தடங்கள்' எனும் தலைப்பில் பேராசிரியர் சந்திசேகரன் நூலாகத் தருகின்றார். 
கல்வியியலில் ஏற்பட்டுவரும் புதிய சிந்தனைகள் செல்நெறிகள் முதலானவற்றை இந்நூலில் இனங்காணலாம். குறிப்பாக அறிவுப் பொருளாதாரம், அறிவுச்சமூகம் முதலான எண்ணக்கருக்களின் அறிமுகம், இவை கல்விசார் நடைமுறைகளில் எத்தகைய விளைவு களை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் தெளிவுபடுத்தப்படு கின்றது. 
மேலும் கலாநிதி பந்துல குணவர்த்தனாவின் கல்வி அறிக்கை, இலங்கை கல்வி முறை எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள், பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் முத லான கட்டுரைகள் இலங்கைச் சூழலில் கல்வி முறைமையின் இயக் கம் எவ்வாறு உள்ளது என்பது பற்றிய விமரிசனக் குறிப்புக்களையும் தருகின்றது. இதைவிட உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள், காலாவதியாகும் பல்கலைக்கழகப் பட்டங்கள், பல்கலைக்கழகங் களில் வன்செயலும் பகிடிவதையும் முதலான உயர்கல்வி தொடர் பிலான சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் முன்வைக்கின்றது.


மா.கருணாநிதி
Karunanithi, M Prof

முனைவர் மா.கருணாநிதி கொழும்புப் பல்கலைகழகத்தில் கல்வியியற் துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் தொடர்ந்து கல்வியியல் கற்கையின் விரிவும் ஆழமும் மிக்க சிந்தனை செயல் குவிமையத்தின் விசைப்படுத்துனராகவும் உள்ளார். 

வளமானதும் வினைத்திறன் மிக்கதுமான ஆசிரிய தொழில்சார் கல்வியின் தேவையையும் முக்கியத்துவத்தையும் ஆசிரியர் சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதிலும், அவை சார்ந்த விழிப்பணர்வு ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் இயங்கிவருகிறார்.
 
தொடர்ந்து மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு ஆசிரியத் தொழில்சார் கல்வி பல்வேறு புத்தாக்கங்களுக்கும் புதுவிசைகளுக்கும் உட்படுத்தப்பட்டு ஆசிர