புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம்

சைவ சமயத்தின் முடிந்த முடிபான கொள்கை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுவது சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவம் சிவனோடு தொடர்புடையது. சைவ சம-யத்தின் தத்துவக்கொள்கை சைவசித்தாந்தம் எனப்படும். சித்தாந்-தம் எனும்சொல் சித்தத்தின் அந்தம் என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படும்போது உள்ளத்தினால் எடுக்கப்படும் முடிவு என்று விளங்கிக்கொள்ளப்படுகிறது. ஆனால் அது முடிந்த முடிபல்ல. திருமூலர் சைவ சித்தாந்தத்திற்குத் தரும் விளக்கம் இந்த இடத்திற் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது. 'சைவசித்தம் தெரிவித்த அந்தம்' என்று திருமூலர் விளக்கந் தருகிறார். இந்த வகையிற் திருமந்திரப் பாடல் (1513) தரும் விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. 
    சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
    சைவம் தனையறிந்தே சிவம் சாருதல்
    சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்
    சைவம் சிவானந்தம் சாயுச்சியமே
இப்பாடலிற் 'சிவம்', 'உயிர்' என்ற இருபொருட் கலப்பு 'சைவம்' எனப்படுகிறது. சிவம் அறியும் முறை, சைவம் அடையும் முறை. அதிலும் சிவத்தை அறிந்த பின்னர் அடையும் முறையே சைவம். மேற்கூறப்பட்ட பாடலின் 3ஆம் அடியில் இருவகைக் கலப்புக் கூறப்படுகிறது. சிவமானது உயிரைச் சார்வது ஒருமுறை, சிவன் உயிரைச் சாராது நிற்றல் இன்னொரு முறை. இங்கு உயிர் சிவத்தை அறிந்து சிவத்தைச் சார்ந்து நிற்றல் என்பது கேவலநிலை. இந்நிலையில் இறைவன் உயிரினுட் தன்னுடைய பெருமைகளை எல்லாம் உள்ளடக்கி, உயிரின் அறிவு, இச்சை, செயல் மேற்பட்டு விளங்குமாறு தாம் அவற்றின் உள்ளடங்கி நின்று, அவ்வுயிருக்கு உதவி செய்யும் முறை கூறப்ப


மா.செல்வராஜா
M.Selvarajah

மட்டக்களப்பு மாநிலம் தந்த கல்வியாளுமை மா.செல்வராஜா. இவர் மட்டக்களப்பு கல்விப்பரம்பரியத்தின் தனித்துவமாக விளங்கும் இராமகிருஸ்ண மிஷன் மற்றும் சிவானந்தாக் கல்லூரியின் வளத்தையும் தளத்தையும் முழுமையாகத் தனதாக்கிக் கொண்டவர். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக மரபு வழியில் தோய்ந்து வளர்ந்து வந்தவர்.
கல்விப்புலத்தில் ஆசிரியர், அதிபர், விரிவுரையாளர், பேராசிரியர், ஆய்வாளர் என்ற வகிபாக மேலேழுச்சியில் பல உன்னதங்கள் கண்டடைந்தவர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கியவர். குறிப்பாக மட்டக்களப்பு கல்வியியல்  'சமுகப் பரிமாணம்' பெற முழு மூச்சுடன் உழைத்து வருபவர். இதனால் உள்ளுர்க் கல்விச் சிந்தனை மூலங்களுக்கான சமூகத் தரிசனத்தையும் வெளிப்படுத்துபவர்.
கல்வி முகாமைத்துவம் தொடர்பான பாரம்பரிய அணுகுமுறைகள் சார்ந்து சிந்தனைகள், ஆய்வுகள் தாண்டி