புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்

பிள்ளையைக் குவிமுகப்படுத்திக் கற்பிக்கும் எந்தவொரு நபருக்கும் உறுதுணையாக இருப்பது கல்வி பற்றிய உளவியலறிவு என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட விடயம். 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்' எனும் இந்நூல் முதற்பதிப்பாக 1997ஆம் ஆண்டு ஏழு இயல்களோடு வெளிவந்தது. இன்று 2011ஆம் ஆண்டு பன்னிரண்டு இயல்களாக விரிவடைந்து பதினான்கு ஆண்டுகளின் பின் ஐந்தாவது பதிப்பாக வெளிவருவதையிட்டு அக மகிழ்வடை கின்றோம். 
1999 - இரண்டாம் பதிப்பு - எட்டாவது இயல் - படைப்பாற்றல்
2003 - மூன்றாம் பதிப்பு  - ஒன்பதாவது இயல் - மொழிவிருத்தி 
2007 - நான்காம் பதிப்பு  - பத்தாவது இயல் - கற்றலின் தகவல்                     நிரற்படுத்தல் மாதிரிகை 
2011 - ஐந்தாம் பதிப்பு   - பதினோராம் இயல் - பல்வகை நுண்மதிகள் 
             - பன்னிரண்டாம் இயல் - மனவெழுச்சி நுண்மதி 
ஆகியவற்றோடு பன்னிரண்டு இயல்கள் அடங்கியதாக இப் புதிய பதிப்பு வெளிவருகின்றது. இது காலத்தின் மாற்றம் மட்டு மல்ல, அறிவுப் பெருக்கத்தின் மாற்றம் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. 
நான்காம் பதிப்பில் பத்தாம் இயல் 'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பதாகும். இந்த இயலோடுதான் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய கல்வியியலாளர் நண்பர் திரு.க.சுவர்ணராஜா அவர்கள் 'அறிகைத் தொழிற்பாடு களும் ஆசிரியரும்'    நூலாக்கத்தில் இணைவு பெறுகின்றார். நான்காம் பதிப்பில் பத்தாமியலாகிய  'கற்றலின் தகவல் நிரற்படுத்தல் மாதிரிகை' என்பது ஐந்தாம் பதிப்பில் 'தகவல் முறைவழியாக்கல் மாதிரிகை' எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளதை


ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
Muthuthtampippillai, A

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அதுகடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர், தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடு, பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்;கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்; இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்;பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்;கள். அவர்;கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாத