புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கல்வியியலும் கணிப்பீட்டியலும்

கற்றல் கற்பித்தற் செயற்பாட்டிலே கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. கணிப்பீடு தொடர்பான தவறான கருத்தாக்கம் (ஆளைஉழnஉநிவழைn) பல்வேறு மட்டங்களிலும் காணப்படுவதால் இத்துறையில் ஒரு நூலாக்கத்தின் தேவையைப் பலரும் வேண்டி நின்றனர். கற்றல் கற்பித்தலிலே உரிய கவனம் செலுத்தப்படாது, கணிப்பீட்டில் மட்டும் ஊன்றிய கவனம் செலுத்தப்படும் நிலையில் இத்துறையிலே தெளிவான காட்சியை ஏற்படுத்த வேண்டிய சமூகத் தேவையும் தோற்றம் பெற்றுள்ளது. 
கணிப்பீடு ஒரு கருவியே அன்றி அது முடிந்த முடிபான கருத்தா அன்று. கணிப்பீடு என்ற கருவியுடன் அரசியல் இணைந்திருத்தலை மார்க்சிய மற்றும் பின்னவீனத்துவ சிந்தனையாளர் தெளிவுபட விளக்கியுள்ளனர். தவறான கணிப்பீட்டு முறைகள் எத்தனையோ மாணவரின் ஆளுமையைச் சிதைத்துமிருக்கின்றன. 
கணிப்பீட்டின் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கிய நூலொன்றை எழுதித்தருமாறு தூண்டுதல் வழங்கிய நண்பர் தெ.மதுசூதனன் அவர்கட்கும் திரு.பூ.பத்மசீலன் அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர். 
 சபா.ஜெயராசா

நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில்


சபா.ஜெயராசா
Jeyarasa, Saba Prof

பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் "கல்வியியல்" துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது "புலமைமரபு" எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.

இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்பு