Book Type (புத்தக வகை) : | குழந்தை இலக்கியம் | |
Title (தலைப்பு) : | செவ்வாய் மனிதன் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | PPMN:2010-06-03-007 | |
ISBN : | 978-955-0367-06-1 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | மு.பொன்னம்பலம் | |
Publication (பதிப்பகம்): | பத்மம் பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2010 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 29 cm 21 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 56 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 260.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | 'பெரியவர்களுக்கான இலக்கியத்தைவிட சிறுவர்களுக்கான இலக்கியம் படைப்பது மிகவும் கடினமானதும் பொறுப்பு வாய்ந்ததுமாகும்' என நான் எனது பிறிதொரு சிறுவர் இலக்கிய நூலில் குறிப்பிட்டுள்ளேன். இதையும் விடக் கடினமானது இரண்டு வயதிலிருந்து நான்கு வயதுக் குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பதாகும். ஆனால் இது பற்றிய நுணுக்கமான விளக்கமுடையவர்களுக்கு, அறிவின் அரும்பு கட்டும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறுசுகளுக்கு கவிதையோ, கதையோ எழுதுவது மிகவும் இலகுவானதாகவும் அமையலாம். காரணம், இவர்களுக்கான கவிதை என்பது ஆங்கிலத்தில் ரேசளநசல சுhவஅநள எனச் சொல்லப்படும்- வெறும் சந்தத்தால் ஆன வார்த்தைப் பிரயோகங்களே. சந்தத்தை கையாளும் திறமையுடையோருக்கு இது இலகுவான ஒன்றே. ஆங்கிலத்தில் இத்தகைய கவிதையொன்றுக்கு உதாரணமாக பின்வரும் கவிதையைக் காட்டலாம். மு. பொன்னம்பலம் |
||||||||||||||
Full Description (முழுவிபரம்): | ஈழத்தின் நவீன கலை இலக்கிய பரப்பில் மு.பொன்னம்பலம் முக்கியமான ஆளுமை. இவர் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமரிசனம், கட்டுரை என பல்வேறு களங்களிலும் இயங்கி வருபவர். தமக்கென்று கருத்துநிலைத் தெளிவு கொண்டவர். அதன் வழியே படைப்பாக்க உந்துதல் கொண்டு ஆத்ம தரிசனத்தின் பன்முகத்தை ஆராயும் பண்பை படைப்பாளுமையாக வெளிப்படுத்துபவர். மரபு வழியான அறிதல்முறை படைப்பாக்க முறைமை முதற் கொண்டு நவீனத்துவமான அறிதல்முறை, சிந்தனைமுறை சார்ந்து சுய விசாரணையில் ஈடுபடும் முதிர்ச்சியும் பக்குவமும் இவரது தனித்தியல்பாக உள்ளது. இதுவே சிறார் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை நல்கி வருகின்றார். சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இலக்கியம் படைக்கும் கலைஞர் அல்ல இவர். மாறாக சிறுவர்களின் உளவிருத்தி, சிந்தனை மட்டம், படைப்பாக்க உந்துதல் முதலானவற்றின் அம்சங்களையும் கருத்தில் எடுத்து சிறுவர்கள் நிலை நின்று அவர்களுடன் ஊடாடும் எழுத்து மரபை உருவாக்குவதில் அதிகம் அக்கறை காட்டுபவர். இத்தன்மைகளை அடையாளம் காட்டும் படைப்பாக்கமாகவே ‘செவ்வாய் மனிதன்” அமைகின்றது.
எமது சமூகப் பண்பாட்டு அசைவியக்கத்தின் அறிவு, ஆற்றுகை மரபுகளையும் உள்வாங்கி மீறவேண்டிய இடத்தில் மீறி புதிதாக கிளைவிட்டு புதிய மனிதர்களுக்கான புதிய விழுமியங்களையும் மதிப்பீடுகளையும் மற்றும் வாழ்வியல் கோலங்களையும் உருவாக்கும் பண்பு இலக்கியமயமாகின்றது. இதுவே சிறார் இலக்கியத்தின் ஆதார தளமாகவும் இயங்குகின்றது. ‘செவ்வாய் மனிதன்” சிறுவர்களின் ரசனைக்கும் படைப்பாக்க உந்துதலுக்கும் புதிய கற்பனைகளுக்கும் வழிசமைக்கும் படைப்பாக விளங்குகின்றது.
இதுபோன்ற சிறார் இலக்கிய நூல்களை தமிழில் உருவாக்கி சிறார் இலக்கியம் வளம்பெற கவிஞரிடமிருந்து நாம் இன்னும் நிறைய படைப்புக்களை எதிர்பார்க்கலாம்.
|
||||||||||||||
|