புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இசையும் சமூகமும்

பொதுவாக எங்கும் இசை இல்லாச் சமூகங்கள் எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. ஒரு நிலையில் இசையே மொழி, விஞ்ஞானம், தொன்மம், மதம் மற்றும் சங்கேத உத்திகள் அனைத்துக்கும் மூலமாக இருந்துள்ளது. 
தொல் சமூகங்கள் உணவுப் பொருள் சேமிக்கவும் வேட்டை-யாடவுமான கருவிக்கு அடுத்தபடியாக இசைக் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கின்றன. மனிதர்களை ஒருங்கிணைக்கும் முறைமையில் இசைக்கருவிகள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இசை எல்லோரது நினைவுகளிலும் நடத்தைக் கோலங்களிலும் சிந்தனையிலும் செல்வாக்கு வகிக்கின்றன. ஆக தனிமனித உணர்வு-களையும் மீறிய ஒரு சமூகப் படிமமாகவே இசை விளங்குகின்றது. இசை உணர்வுகள் சமூக இருப்பிலிருந்தே கிளர்ந்தெழுகின்றன. தொல் சமூகங்களது நீண்ட இருப்பு வன்முக இசை உணர்வுகளின் உருவாக்கத்துக்குக் காரணமாகிறது. இன்னொருபுறம் சில அடிப்ப-டையான வகைப்பாட்டுக்குள் அடங்கும் பண்புகளையும் கொண்-டுள்ளன. இது தொன்ம இசைக்கு மட்டுமன்றி நவீன இசைகளுக்கும் நன்கு பொருந்தும்.
இசையை நாம் பயன்பாட்டு இசை மற்றும் அழகியல் இசை என ஒரு பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். பயன்பாட்டு இசை மதச் சடங்குகள் சமூகச் சடங்ககள் வாழ்வியல் சடங்குகள் இவற்றுடன் நேரடித் தொடர்புடையவை. இவற்றுடன் மாந்திரிகம், மருத்துவம், வழிபாடு உபாசனை என்பனவும் சேர்ந்து கொள்-கின்றன. மந்திரமும் சடங்குகளும் புராதன கிராமிய வாழ்க்கையின் அறிகைக் கோலங்களையும் வெளிப்படுத்தின. சமூக வாழ்வின் அத்தனை தருணங்களும் இசையின் துணையின்றி நடக்காது. இந்த நிலை தொல்சமூகங்களுக்கும் நவீன சமூகங்களுக்கும்


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.