|
கல்வியியல் துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் செயற்பாடுகளையும் மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும் தமிழில் உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான அறிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும் முனைப்புடன் செயற்பட்டவர்.
|