Gnanakumaran, N Prof | |
பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் கடந்த 34 வருடங்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் கடமையாற்றி வருபவர். இவர் பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992), நயந்தரும் சைவசித்தாந்தம் (1994), சைவசித்தாந்தத் தெளிவு (1994), சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995), சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997), மெய்யியல்(2003), அருளாளர்களின் சமய அனுபவம்(2004), சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012), மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012), மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012) முதலான நூல்களின் ஆசிரியர். மெய்யில், சைவசித்தாந்தம், வேதாந்தம் ஆகிய துறைகளில் ஆழமான ஈடுபாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் மிக்கவர். சுவீடன் ஒப்சலா பல்கலைக்கழகம், அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைப் பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தவர். இந்தியாவில், அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஆய்வரங்குகளிலும் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். இவரது புத்தகங்கள் இலங்கையில் உயர் விருதான சாகித்தியப் பரிசினைப் பெற்றுள்ளன.
|