Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் நவீன அணுகுமுறைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2015-08-01-139
ISBN : 978-955-685-038-3
EPABNo : EPAB/2/19292
Author Name (எழுதியவர் பெயர்) : மா.செல்வராஜா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2015
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 216
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 760.00
Edition (பதிப்பு): 5ம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

01. அறிமுகம்    01    
02. விடய ஆய்வுக்கு விடையளிப்பதற்கான அணுகுமுறைகள்    01
03. விடய ஆய்வு ஒன்று    08
04. விடய ஆய்வு இரண்டு    17
05. விடய ஆய்வு மூன்று    26
06. விடய ஆய்வு நான்கு    34
07. விடய ஆய்வு ஐந்து    45
08. விடய ஆய்வு ஆறு    58
09. விடய ஆய்வு ஏழு    73
10. விடய ஆய்வு எட்டு    79
11. விடய ஆய்வு ஒன்பது    84
12. விடய ஆய்வு பத்து    88
13.  விடய ஆய்வு பதினொன்று    92
14. விடய ஆய்வு பன்னிரண்டு    95
பின்னிணைப்பு
கடந்தகால வினாப்பத்திர விடய ஆய்வுகள்    100
கடந்தகால வினாப்பத்திர விடய ஆய்வுகள்    186
கடந்தகால வினாப்பத்திர விடய ஆய்வுகள்    208
சொல்லடைவு    211

 

Full Description (முழுவிபரம்):

முகாமைத்துவ விடய ஆய்வு தொடர்பாக 1991ஆம் ஆண்டு வெளியான எனது வெளியீடுகள் பற்றி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் ஆகியோ நன்கறிவர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் மட்டுமன்றி முகாமைத்துவத்தில் நாட்டமுள்ள அனைவரும் தமது தொழில் திறன்களை வளர்க்கும் பொருட்டும், சுயமான கற்றலை மேற்கொள்ளவும், கல்வி தொடர்பான பரீட்சைகளுக்குத் தம்மை ஆயத்தம் செய்யவும், இன்னும் கூடிய விளக்கங்களுடனும் வழிகாட்டல்களுடனும் இதனை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றுமுகமாக இந்நூல் வெளிவருகின்றது. 
பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. விடய ஆய்வுக்கு விடையளிக்கும் பல்வேறு அணுகுமுறைகள், விடய ஆய்வுகள், அவைகள் மீதான வினாக்கள், குறிப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கி வெளிவரும்  இந்நூல், அதிபர்கள் சேவைப்பரீட்சை (ளுடுPளு)இ கல்வி நிருவாக சேவைப் பரீட்சை (ளுடுநுயுளு)இ தடைதாண்டுப் பரீட்சைகள் (நுடீ)இ பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, புதுமுகத் தேர்வுகள் போன்றவற்றுக்கும் பயன்படுவதுடன், கல்வித் துறையில் பணிபுரிவோர் தம் முகாமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கும் பயன்படும்.
தமிழில் கல்வி முகாமைத்துவ இலக்கியங்கள் மிக அரிதாகவே யுள்ளன. தமிழ்மொழி மூலம் கல்விப் போதனை இடம்பெறும் இக்காலத்தில் முகாமைத்துவ இலக்கியங்களுக்குத் தேவை அதிகமாக வுள்ளது. இதனை உளத்திற் கொண்டே பல்வேறு செயற்பாடுகளின் மத்தியிலும் இந்த வெளியீட்டு முயற்சியில் பணியாற்ற வேண்டியதாயிற்று. 
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் உட்பட, கல்வித் துறையில் பணியாற்றும் பணியணியினர் இத்தகைய ஆக்கங்களுக்கு வழங்கி வரும் ஊக்குவிப்புக்கு எனது நன்றிகள் உரித்தாகும். இந்நூலை அவர்கள் வரவேற்பார்கள் என நம்புகின்றேன். 
இந்நூலுக்கு முன்னுரை ஒன்றை (ஆங்கிலத்தில்) வழங்கிய தேசிய கல்வி நிறுவக கல்விப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தி.காரியவசம் அவர்களுக்கும், மற்றும் அணிந்துரை வழங்கியவர்களான தேசிய கல்வி நிறுவக உதவிக் கல்விப் பணிப்பாளர் நாயகம் (மொழி இணைப்புப் பிரிவு) கு.சோமசுந்தரம், தமிழ் மொழித்துறை அவர்களுக்கும், கல்வி உயர்கல்வி அமைச்சின் பிரதிச் கல்விப் பணிப்பாளர் நாயகம் (தமிழ்) திரு.வெ.சபாநாயகம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். இத்திருத்திய பதிப்புக்கு அணிந்துரை வழங்கிய கொழும்புப் பல்கலைக்கழக கல்விப்பீட பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களுக்கும் எனது நன்றிகள். 
இப்புதிய பதிப்பில் மேலும் பல புதிய விடயங்கள் ஆய்வுகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன்,  அண்மைக் காலங்களில் இடம்பெற்ற  கல்வி நிருவாக சேவை வினாப்பத்திரங்களில் இடம்பெற்றுள்ள விடய ஆய்வுகளின் வினாக்களும், மாதிரி விடைகளும் இடம்பெறுகின்றன. இவ்வெளியீட்டினைச் சிறப்பாக மேற்கொள்ள சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

 

பேராசிரியர் மா.செல்வராஜா
தலைவர், கல்வி பிள்ளைநலத் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை