Book Type (புத்தக வகை) : இலக்கிய வரலாறு
Title (தலைப்பு) : கிராமத்துக் கதைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : PPMN:2010-01-01-001
ISBN : 978-955-0367-00-9
EPABNo : EPAB/2/19231
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): பத்மம் பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 360.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கிராமத்துக் கதைகள்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 104
Content (உள்ளடக்கம்):

சிறுவர் இலக்கியங்கள் மொழியின் எழுத்துரு தோன்றுவதற்கு முன்பே ஆக்கம் பெற்றுவிட்டன. வாய்மொழிக் கையளிப்பாக சிறார் கதைகளும் பாடல்களும் இடம்பெற்று வந்தன. சமூக வளர்ச்சியின் போது அடுக்கமைப்பின் உயர்நிலைப்பட்டோர் வரன்முறையான கல்வியை மேற்கொள்ளலாயினர். அவர்கள் எழுத்துரு சார்ந்த சிறார் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட சமூகத்தின் அடிநிலை மாந்தர்களிடத்து வாய்மொழி மரபு தொடர்ந்து கொண்டிருந்தது. 
கிடைக்கப்பெறும் ஆவணங்களை அடியொற்றி நோக்குவோமா-யின் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவிலே தான் சிறுவர் இலக்கிய எழுத்துரு மேற்கொள்ளப்பட்டது. அல்டுகெம் என்ற புலமையாளர் அந்த முயற்சியை முதலில் மேற்கொண்டார். அந்த ஆக்கம் இலத்தீன் மொழியில் எழுதப் பெற்றது. 'திரட்டல்' நூலாக அது அமைந்தது. கிறிஸ்தவ சமயப் பனுவல்களின் அடிப்படையிலே 'ஏழாம் இலக்கத்தின் சிறப்பு' ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நிகழும் உரையாடல், புதிர்கள், நொடிகள் முதலியவற்றின் திரட்டலாக அந்நூல் அமைந்தது. 
அவ்வாறு 'திரட்டி எழுதும்' மரபு தொடர்ந்த வண்ணமிருந்தது. பிடே (கி.பி.673-735) அல்குவின் (கி.பி 735-804) முதலானோர் அந்த மரபை மேற்கொள்ளலாயினர். வரன்முறையான கல்வி வளர்ச்சியின் ஒரு சிறப்பார்ந்த நோக்கமாக அறவொழுக்கங்களைக் கற்பித்தல் சிறப்படைந்தது. விலங்குகள் பறவைகளின் கதைகள் வாயிலாக அறக்கருத்துக்கள் சிறாரிடத்துக் கையளிப்புச் செய்யப்பட்டன. 
அராபிய இரவுக் கதைகள் ஈசாப் கதைகள் முதலியவற்றின் தொகுப்பு சிறார் இலக்கிய வெளியீட்டின் ஒரு சிறப்பார்ந்த படிநிலையாகக் கொள்ளப்படுகின்றது. வில்லியம் கக்ஸ்டன் (1422-1419)அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கில மொழியின் உலகளாவிய பரவலைத் தொடர்ந்து அக்கதைகள் பல்வேறு நாடுகளுக்கும் பரவலாயின. 
அச்சுக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியும், சிறார் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் சிறார் 'தாமாகவே தமது பொறுப்பில்' வைத்திருக்கும் நூலாக்களைத் தோற்றவித்தன. சிறார் கையாளும் பொழுது கிழிந்துவிடாத அமைப்பைக் கொண்ட 'ஹேர்ண் புத்தகங்கள்' (ர்ழசn டீழழமள) பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்றன. 
கல்வியியலாளர் கொமீனியஸ் (1592-1670) மேற்கொண்ட சிறார்க்குரிய பாடநூலாக்க முயற்சிகள் சிறார் இலக்கிய ஆக்கங்களிலும் வெளியீட்டு முயற்சிகளிலும் பெரும் விசைகளை உருவாக்கின. அக்காலத்திலே வளர்ச்சி பெற்றிருந்த கற்பித்தற் கலை நுட்பங்களைப் பயன்படுத்திப் படங்களுடன் கூடிய நூலாக்கங்களை அவர் மேற்கொண்டார். அந்த வகையிலே 'படங்களில் உலகம்' என்ற நூல் அவரால் முதன் முதல் வெளியிடப்பட்டது.
கொமினியசைத் தொடர்ந்து அமெரிக்கக் கல்வியியலாளரும் சிறார் கல்விக்குரிய நூலாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாயினர். மெசசூட்சில் வாழ்ந்த பென்ஜமின் ஹரிஸ் (1673-1713)  என்பார் அவ்வாறான வெளியீட்டு முயற்சியை மேற்கொண்டார். அரிச்சுவடியைப் பாடல் வடிவிலே கற்பிக்கும் முயற்சியை அந்நூல் முன்னெடுத்தது. 
 அவற்றைத் தொடர்ந்து சிறாருக்குரிய நூலாக்கங்கள் துறைகளாக வளர்ச்சி கொள்ளலாயின. கற்பிப்பதற்குரிய நூலாக்க முயற்சிகள் ஒரு துறையாகவும், சிறாருக்குரிய ஆக்க இலக்கிய நூலாக்கங்கள் இன்னொரு துறையாகவும் வளர்ச்சிபெறத் தொடங்கின. டானியல் டிபோ (1660-1731) எழுதிய ரொபின்சன் குருசோ, ஜோன்டைடன் சுவிப்ற் (1667-1745) எழுதிய 'கலிவரின் பயணங்கள்' சார்ல்ஸ் பேரோல்த் (1628-1703) எழுதிய 'தாய்த்தாராவின் கதைகள்' முதலியவை சிறார்க்கான ஆக்க இலக்கிய நூல்களாக எழுச்சி கொண்டன.
சிறார் தொடர்பான ரூசோவின் (1712-1778) இயற்கை நிலைச் சிந்தனைகள் இலக்கிய வளர்ச்சிக்கும், சிறார் தொடர்பான நேர்முக அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கும் பெரும் விசைகளாயின. சிறார்கள் தாமாகக் கற்றுக்கொள்ளல், தாமாகவே முயன்று அனுபவங்களைத் திரட்டிக்கொள்ளல், இயற்கையோடு இணைந்து வாழ்தல், தலையீடு இல்லாத வளர்ச்சி முதலிய கருத்துக்களை ரூசோ வலியுறுத்தினார். 
சிறாரைச் சுரண்டலில் இருந்து விடுபடவைப்பதற்கு கார்ல்மார்க்ஸ் முன்வைத்த வைராக்கியமான கருத்துக்களும் சிறார்  இலக்கிய ஆக்கங்களைப் பொறுத்தவரை புதிய யுகத்தைத் தோற்றுவித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே விரைந்து வளரத் தொடங்கிய பாடசாலை முறைமையும், அச்சுக்கலை வளர்ச்சியும், பன்முகமான கருப்பொருள்களை உள்ளடக்கிய சிறார் இலக்கியப் புனைவுகளை முன்னெடுக்கத் தூண்டின. அதாவது சிறார் இலக்கிய ஆக்கத்திலே ';பல்வகைமை' (ஏயசநைவல) வளர்ச்சி பெறலாயிற்று.  சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.&a

Full Description (முழுவிபரம்):

நாம் கதைகளால் நிரம்பிய உலகத்தில்தான் வாழ்கின்றோம். நமக்குக் கதையென்பது காலத்தின் தொல்வடிவங்களுள் ஒன்றாகும். நமக்குக் கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல் சார்ந்த உயிர்ப்பான தருணங்களாகும். நமது ஆத்ம ஈடேற்றத்தின் சடங்காக வாழ்முறைக்கான வளமான கூறுகளாக அடையாளம் காட்டும் களஞ்சியம்.  மானிட வாழ்வில் இந்தக் கதைகள் பண்டமாற்றம் போல் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்தப் பரிமாற்றம் பன்முக ரீதியில் இன்றுவரை தொடர்கிறது. 

கதை சொல்லலும் கேட்டலும் தொடர்ந்து கதை புனையும் பண்பையும் வளர்த்தெடுத்தது, கதையெழுதும் மரபையும் கண்டுபிடித்தது. ஆக கதைகள் நமது மகிழ்வுக்குரிய சாதனம். பொதுவில் கதைகள் எங்கும் நீக்கமற ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மானிட வளர்ச்சியின் உயிர்ப்புத் தளமாகவும் கதைக்களம் இடம்பெறுகின்றது. 
 
பன்னாட்டுப் பண்பாட்டு அடையாளமாகவும் கதைகள் நீட்சி பெறுகின்றது. கதையின் வழியே நமக்கான வாழ்வியல் மதிப்பீடுகள் கருத்தேற்றம் செய்யப்படுகின்றது. தனிமனிதனின் ஆசைகள் விருப்புகள், இரகசியங்கள், மகிழ்ச்சியின்மைகள், இயலாமைகள், தோல்விகள், வீரம், துணிச்சல், நகைச்சுவைகள் போன்றவைகள் கதைகள் வழியே பரிமாறப்படுகின்றன. இதைவிட சமூகத்தின் மீதான தனிமனிதனின் கோபம், இயலாமை மற்றும் அதிகாரத்தை மறைமுகமாக பரிகசிப்பது போன்றவையும் கதைவழியேதான் நமக்குச் சாத்தியமாகின்றன. இதனால்தான் சிறார்களுக்கான கதைகள் தமிழில் அதிகம் வெளிவரவேண்டியுள்ளது. இன்றுவரை கதைகள் மூலம் தன்னையும் சமூகத்தையும் புரிந்து கொள்வதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கதைக்களம் எம்மிடையே நீண்டு கொண்டிருக்கிறது. கதையை நாம் எதிர்கொள்ளும்போது கதையின் பகுதியாகவே நாம் மாறிவிடுவதோடு கதை சொல்லிகளாகவும் நாம் தொடர்ந்து அலைந்து திரிகின்றோம். 
 
‘கிராமத்துக் கதைகள்” என்னும் இத்தொகுப்பு சிறார் இலக்கியத்தில் புதுவரவு. இந்தக் கதைகளில் கதை சொல்லப்படும் சூழல் மற்றும் கதைசொல் முறை போன்றவற்றில் புதுமையும் புத்தாக்கமும் இழையோடுகின்றது. எமக்கு புதுக்கதைகளை இயற்றும் பண்பையும் கற்றுத்தருகின்றது. இந்த ரீதியில் இந்த ஆக்கம் வெற்றிகரமான படைப்பென்றே கூறலாம்.