தென்னாசியாவின் அரசியல் கலாசாரம் |
'தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்' என்ற நூல் நீண்டவாசிப்பும், உரையாடலின் பின்பாக வெளிவரும் பிரசவ-மாகும். ஏறக்குறைய 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் இந்நூலுக்கான தயார்ப்படுத்தலும் முதுமெய்யியல் மானிக்கான ஆய்வும் ஒரே சமகாலத்தில் நிகழ்ந்ததெனக் கூறலாம். முதுமெய்யியல் மானிக்கான ஆய்வில் தேடியவற்றை அப்படியே ஒப்புவிக்க முடி-யாத மட்டுப்பாட்டினால் எழுந்ததே இந்நூலாகும். மேலும் அக்கா-லப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை மாண-வர்களுக்கான தென்னாசிய அரசியல் பற்றிய கற்பித்தலை மேற்-கொள்ளும் சந்தர்ப்பம் பேராசிரியர் என். சண்முகலிங்கத்தினால் (தற்போதைய துணைவேந்தர்) எனக்கு வழங்கப்பட்டது. அதனை தெளிவாகப் புரிந்துகொண்ட நான் அவ்விரிவுரை வகுப்புக்களில் என்னிடம் கேள்விகளையும், அதற்கான தயார்ப்படுத்தலின் இயைபுத் தன்மையையும் ஒழுங்குபடுத்த உதவிய சமூகவியல் துறை மாண-வர்களின் பின்னூட்டல் இந்நூலின் உருவாக்கத்திற்கான இன்னோர் காரணமாகும். இதனைவிட தென்னாசியாவின் அரசியல் கொதி-நிலை தொடர்பாக என்னிடம் இயல்பாகக் காணப்படும் கருத்தியல் மாதிரியும் இதன் படைப்புக்கு வலிமை சேர்த்த காரணியாகக் கொள்ளலாம். இந்நூலினை 2005ஆம் ஆண்டுகளில் வெளியி-டுவதென தீர்மானித்த போதே என்னைத் திட்டமிட்டு பழிவாங்க முயன்ற நடவடிக்கை நிகழ்ந்தது. அதனால் இவ்வெளியீட்டை காலம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. |