உலகக் கல்வி வரலாறு |
உலகக் கல்வி வரலாறு தொடர்பாக தமிழில் வெளிவரும் முதலாவது ஆக்கமாக இந்நூல் அமைகின்றது. 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஆய்வரங்கில் இவ்வாறான ஒரு நூலின் தேவை கலந்துரையாடலின்போது வெளிவந்தது. குறித்த அமர்வு ஒன்றினுக்குத் தலைமை தாங்கிய வேளை என்னிடம் இக்கருத்து முன்வைக்கப்பட்டது. தமிழில் 'உலகின் கல்வி வரலாறு' தொடர்பான எந்தவொரு நூலாக்கமும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே இத்துறையில் வெளிவரும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும் அமை கின்றது. உலகக் கல்வி வரலாறு பல்வேறு தொகுதிகளில் எழுதப்படவேண்டிய பெரு நிலைப்பரப்பாகும். இந்நூல் அந்தப் பெரும் பரப்பைச் சுருக்கிச் சிமிழ் நிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் சிக்கலானது. இத்தகைய பணியை நூலாசிரியர் துணிந்து மேற்கொண்டுள்ளமை பாராட் |