ஆசிரியரை வினைத்திறன் மிக்கவராக்கல்
|
ஆசிரியர்கள் பாடசாலைக் கல்வி முறையின் மைய விசையாக கருதப்படுகிறார்கள். பாடசாலை கல்வியை விளைதிறன் மிக்கதாக்க வேண்டிய தேவை உலகரீதியாக வற்புறுத்தப்படுகின்றது. கல்வியில்அதிகளவு அரச நிதியை முதலீடு செய்துவரும் இலங்கை போன்ற நாடுகள் பாடசாலைக் கல்வி தோல்வியடையாது தடுப்பது தொடர்பாக தொடர்ந்து முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இந்த தேவையப்படையில் ஆசிரியர்கள் பற்றிய கவனக்குவிப்பு அதிகரித்து வருவது நியாயமானதாகிவிட்டது.
ஆசிரியர்கள் தம்மளவிலும் பாடசாலை மட்டத்திலும் வினைத்திறனுடன் செயற்பட வேண்டியது மிக அவசியமாகும். இவை தொடர்பான அம்சங்கள் இந்நூலி ஆராயப்பட்டுள்ளன. அதேபோல் சமூக மட்டத்திலும் பல்வகைப்பட்ட மாதிரிகளில் தொழிற்பட வேண்டியுள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்களை விளைதிறன் மிக்கவராக முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும், வழிகாட்டல்கள் பற்றியும் இந்நூல் விரிவாக ஆராய்கின்றது.
ஆழமாக இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொரு ஆசிரியரதும் சிந்தனை, நடத்தை என்பவற்றில் நிச்சயமாக மாறுதல்கள் ஏற்படும் என நம்புகிறேன் எனது வாசிப்புப்பலமும், அனுபவங்களும் ஆசிரியர் மீதான கூர்மையான எனது அவதானமும் இந்த நூலை விரிவாக எழுதுவதற்கு எனக்கு உதவின.
இந்த நூலை எழுதுங் காலத்தில் எனக்கு பல்வேறு வழிகளிலும் உதவிய எனது அன்பு மனைவி சசிலேகாவுக்கும் எனது பிள்ளைகளான சிராணி, சாளினி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்.
நெருக்கடியான காலகட்டத்தில் தமிழர் உயர்கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்களைக் கழகத்தை திறமையாக நிர்வகித்து வரும் துணைவேந்தர் பேராசிரியர் நாகலிங்கம் சண்மு
|