Book Type (புத்தக வகை) : நிர்வாகவியல்
Title (தலைப்பு) : முகாமைத்துவக் கொள்கைகள் - ஓர் அறிமுகம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-02-03-008
ISBN : 978-955-1857-07-3
Author Name (எழுதியவர் பெயர்) : சோ.சந்திரசேகரன் மா.கருணாநிதி
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 200.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

1. அறிமுகம்

2. விஞ்ஞானப்பாங்கான முகாமைத்துவம்

  • ​Max Weber இன் பணிக்குழுவாட்சி
  • கல்வித் துறையில் விஞ்ஞானப் பாங்கான முகாமைத்துவம்
  • ஐக்கிய அமெரிக்கக்கல்வி முறையில் விஞ்ஞானப் பாங்கான முகாமைத்துவம்
  • முறைசார் மாதிரிகள்

3. மனித உறவுகள் அணுகுமுறை

  • Mayo வின் சிந்தனைகள் - சில விமரிசனங்கள்
  • ஊக்கல் கொள்கையும் முகாமைத்துவமும்
  • ஊக்கல் கொள்கை - யுடிசயாயஅ ஆயளடழற
  • இரு காரணிக் கொள்கை
  • XY கொள்கை
  • தோழமை மாதிரியின் பிரதான அம்சங்கள்

4. சமூக அறிவியல் கொள்கை

  • முறைமைக் கொள்கை
  • Getzels, Guba வழங்கிய கொள்கைகள் 
Full Description (முழுவிபரம்):

சமூக அறிவியல் துறைகளில் பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடையதும் நேரடியாக வாழ்க்கைப் பயன்பாடுடையதுமான ஒருதுறை முகாமைத்துவம் எனலாம். இன்று முகாமைத்துவம் ஒரு புலமைசார் துறை என்ற முறையில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதோடு அத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பல  முகாமைத்துவக்கல்வி நிறுவனங்கள் உலகில் எழுந்துள்ளன. இத்துறைசார்ந்த ஆய்வாளர்கள் நூல்கள் சஞ்சிகைகளும் ஏராளம். ஐக்கிய அமெரிக்கா உலகில் பெரு வல்லரசானதற்கான காரணங்கள் பற்றிக் கூறும் முகாமைத்துவ மற்றும் எதிர்காலவியல் பெருமறிஞரான பீற்றர் ட்றக்கர் அந்நாட்டில் முகாமைத்துவத் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை ஒரு காரணமாகக் கூறுகின்றார். உலகளாவிய மகத்தான சாதனைகளுக்குப் பின்னணியில் (பிரமிட், சீனப் பெருஞ்சுவர்) ஏதோவொரு முகாமைத்துவம் இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று முகாமைத்துவம் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் மட்டுமன்றி குடும்பம், பொருளாதாரம், இனமுரண்பாடுகள், அறிவு, கோபம் என்பவற்றைப் பொறுத்தவரையிலும் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் நாற்பது சதவீதமான ஊழியர் தொகுதியினர் சாதாரண தொழிற்சாலை ஊழியராக இருந்தனர். முதலாம் யுத்த காலத்தில், முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காலத்தில் மக்களில் 35 சதவீதமானோர் வீட்டுப்பணியாளராகவே பணிபுரிந்தனர் என பீற்றர் ட்றக்கர் மதிப்பிடப்பட்டுள்ளார். இன்றைய அமெரிக்காவில் ஊழியர் தொகுதியில் 35 சதவீதமானோர் 'முகாமையாளர்களும் உயர்தொழில் வல்லுநர்களும்' எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
முன்னொருபொழுதும் இல்லாதவாறு, இவ்வாறான அடிப்படை  மாற்றத்துக்கு முகாமைத்துவமே காரணமாகும். இன்று உருவாகியுள்ள அறிவுசார் பொருளாதாரம்  அதில் பணிபுரியும் ஆயிரமாயிரம் ஊழியர்கள் எவ்வாறு உருவானவர்கள் என்பதற்கு முகாமைத்துவமே காரணம். கீழ்மட்ட ஊழியர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை செய்வதே முகாமைத்துவம் என்ற வரையறை வழக்கிழந்து, வௌ;வேறு அறிவையும் திறன்களையும் கொண்டோரைப் பயன்படுத்தி பொருள் உற்பத்திப் பெருக்கத்தை ஏற்படுத்துவதே முகாமைத்துவம் என்பது முகாமைத்துவதற்குப் புதிய நூற்றாண்டு கண்டுள்ள வரையறை.
இப்பின்புலத்தில் முகாமைத்துவக் கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது. கல்வித்துறையைப் பொறுத்தவரையில் முகாமைத்துவத்தில் சரியான பயிற்சியுள்ளவர்களின் பற்றாக்குறையின் காரணமாகவே கல்விமுறையானது குறைபாடுகளுடனும் வினைத்திறனற்றும் செயற்படுகிறது என்பது ஆய்வாளர் கருத்து. கல்வியின் தராதர மேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளுக்குள் பாடசாலைத் தலைவர்கள் அதிகாரிகளுக்கான முகாமைத்துவப் பயிற்சியும் அடங்கும். தமிழ்மொழியினூடாக முகாமைத்துவத்தைப் பயிலுவோருக்கான கனதியான முகாமைத்துவ நூல்களின் தேவையை ஓரளவுக்கேனும் நிறைவுசெய்யும் முகமாக முகாமைத்துவக் கொள்கை பற்றிய இந்நூலை எழுதி வெளியிட முடிவு செய்தோம். 
இந்நூல் 19ஆம் நூற்றாண்டின் பெரு முக்கியத்துவம் பெற்ற விஞ்ஞானப் பாங்கான முகாமைத்துவ அணுகுமுறை தொடங்கி மனித தொடர்பு கொள்கை, சமூக அறிவியல் கொள்கை, ஊக்கல் கொள்கை, திறந்த முறைமைக் கொள்கை, என்பவற்றைப் பற்றி மட்டும் இந்நூலில் எழுதியுள்ளோம்.
கல்வி முகாமைத்துவத்தைப் பல்கலைக்கழக மட்டத்திலும், தேசிய நிறுவகக் கற்கைநெறிகளிலும் சேர்ந்து பயிலும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகளுக்கும் இவர்கள் தவிர கல்வி முகாமைத்துவப் பணியில் ஈடுபட்டிருப்போருக்கும் இந்நூல் பயன்படுமென நம்புகிறோம். 
பேராசிரியர். சோ.சந்திரசேகரம்
கலாநிதி.மா.கருணாநிதி