Book Type (புத்தக வகை) : பொருளியல்
Title (தலைப்பு) : பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2010-10-01-084
ISBN : 978-955-1857-83-2
EPABNo : EPAB/2/19273
Author Name (எழுதியவர் பெயர்) : சி.விஜயகுமார்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2010
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 196
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 460.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம் 

  • பருநிலைப் பொருளியலின் முக்கியத்துவமும் செயற்பாடும்
  • நாணயக்கொள்கையும் வேலை வெளியீடு மற்றும் விலை உறுதிப்பாட்டு நிர்ணயிப்பும்
  • பொருளாதாரத்தில் முதலீடு
  • கெயின்சிய வாதமும் நாணயவியல் வாதமும் : ஓர் ஒப்பீட்டாய்வு
  • உற்பத்தி செலவுக் கோட்பாடு
  • சந்தையமைப்புக்கள்
  • நேர்கோட்டுத் திட்டமிடல் மாதிரியின் பிரயோகம்
  • சந்தைப் பொருளாதாரத்தில் அரச தலையீடு
  • சந்தைதோல்வியும் தவறான வள ஒதுக்கீடும் : ஓர் கோட்பாட்டு ரீதியான நோக்கு
  • சூழல் பொருளியல்
  • பூரண நிறைபோட்டிச் சந்தையும் பரட்டோ உத்தமமும்
Full Description (முழுவிபரம்):

சமுக விஞ்ஞான துறைகளில் பொருளியல் மிகமுக்கியமான ஓர் பாடநெறியாகும். கலைத்துறை மாணவர்கள் மட்டுமல்லாது வணிக முகாமைத்துவ கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களினதும் யுயுவுஇ டீயமெiபெஇ ஊஐஆயு போன்ற தொழில்சார் கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களினதும் பெரும் விருப்பத்திற்குரிய ஒரு பாடநெறியாக பொருளியல் இருந்து வருகின்றது. அது மாத்திரமல்லாது சாதாரண மக்க ளும் பொருளியல் பற்றிய அடிப்படைகளை அறிந்துகொள்வதற்கு விருப்பமுடையவர்களாக உள்ளனர். 
இலங்கையில்  தமிழ்  மற்றும் சிங்கள மொழிகளில் பொருளியல் நூல்கள் வெளிவருவது மிகக்குறைவாகும். குறிப்பாக இதுபற்றி தனது வாழ்த்துரையில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் னுச. அமலா  டி சில்வா குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகம் தொடங்கி 30 வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் போதியளவான பொருளியல் நூல்கள் வெளிவரவில்லை என்பதை எனது அன்புக்குரிய மூத்த பேராசிரியர் னுச. நித்தியானந்தம் தனது பருநிலைப் பொருளியல் ஓர் அறிமுகம் எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் நித்தியானந்தம் பருநிலைப் பொருளியல் ஓர்  அறிமுகம் எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார.; 'பொருளியல் என்பது மூன்றாம் தரமட்டத்தில்  பாடநூல் வரையறைக்குட்பட்ட தாக தமிழில் எமுதப்படாமையின்  ஒரு முக்கியதாக்கம் என்ன வெனில் அதில் உள்ளடங்கும் எண்ணக்கருக்கள் கோட்பாடுகள் உட்பட்ட பல விடயங்களையும் பொருத்தமாக விளக்கவல்ல துறைசார்ந்த கலைச்சொற்களும் சொற்றொடர்களும் தமிழிற் பூரணமான தொரு பொதி என்பதாயிராது அரையும் குறையுமாக ஒரு பற்றாக்குறை நிலைமையில் காணப்பட்டமையாகும்.' மேலும் மாணவர்களும் ஆசிரியர்களும் இதேவகையான கருத்துக்களை கொண்டிருந்தனர் எனபதை எனது அனுபவ வாயிலாக அறிந்தேன். தமிழ் மொழியில் கிடைக்கக்கூடிய பொருளியல் பாட நூல்கள் இன்மையால் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்க ளும், ஆசிரியர்களும் பொருளியல் சம்பந்தமான நடைமுறை விடயங்கள் மற்றும் கொள்கைகள்  கோட்பாடுகளை வாசித்து அறிவதில் மிக்க கஷ்டங்களையும் இடையூறுகளையும் எதிர்நோக்கி வருவதை கண்முன்னே நான் காண்கின்றேன். பொருளியலை சிறப்பு பாடமாக பயிலும் மாணவர்களும் தமிழ்மொழியில் பொருளியல் சம்பந்தமான நூல்களை வெளியிடவேண்டும் என என்னை அன்பாக வேண்டிக் கொண்டனர். பேராசிரியர் வி.நித்தியானந்தம், சி.விஜயகுமார் (நான்),  னுச.ளு.சந்திரசேகரன் ஆகியோர் பருநிலைப்பொருளியல் பற்றி தலா ஒவ்வொரு நூல்களை எமுதியிருக்கின்றனர். ஆனால் இடைநிலை நுண்பாகப் பொருளியல் சம்பந்தமான தமிழ்மொழி மூல நூல்கள் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது. எனவே நுண்பாகப் பொருளி யல் பற்றி ஒரு தனி நூலினை எமுதவேண்டும் என்ற அவா என்னிடம் நீண்டகாலமாக இருந்து வருகின்றது. ஆனால் கலாநிதிப் படிப்புக்காக ஐரோப்பா பயணமாகும் நிலையில் எல்லா நுண்பாக பொருளியல் கோட்பாடுகளையும் எழுதுவதற்கு எனக்கு நேரம் அருமையாக  இருந்தது. எனவேதான் பருநிலைப்பொருளியலின் சில முக்கியமான விடயங்களை யும் நுண்பாகப் பொருளியலில் அதிமுக்கியத்துவம் பெறுகின்ற செலவுக் கோட்பாடு, சந்தையமைப்பு, சந்தைதோல்வி,  போன்ற விடயங்களை யும் உள்ளடக்கி 'பருநிலை மற்றும் நுண்பாகப்பொருளியல் கோட்பாடு கள்' என்ற நூலை எழுதியுள்ளேன். இந்நூல் மாணவ சமுகத்திற்கும் தமிழ் சமுகத்திறகும் மிக்க பயன் நல்கும் என்பது எனது அசைக்கமுடி யாத நம்பிக்கையாகும். மாணவர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் ஏதேனும் நான் செய்ய வேண்டும்  என்ற எனது  உறுதியான முடிவுகாரணமாக பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள் என்ற நூலை என்ற  எனது நூலை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்.  மிக முக்கிய மான நுண்பாக கோட்பாடுகளான உற்பத்தி செலவுக்கோட்பாடு, சந்தை அமைப்புக்கள், சந்தைதோல்வி  போன்ற விடயங்களை எடுத்து மிகசிறப்பாக எழுதியிருக்கிறேன். இதேபோல் பருநிலைப் பொருளி யலின் முக்கியத்துவமும் செயற்பாடும் நாணய கௌ;கையும் வேலை விலை மட்ட உறுதிப்பாடும், முதலீடு, கெயின்சியவாதமும் நாணயவாத மும், சந்தைப் பொருளாதாரத்தில் அரச தலையீடு, சூழல் பொருளியல்  போன்ற விடயங்களும் இங்கு ஆராயப்பட்டுள்ளது. இந்நூலில் பருநிலை மற்றும் நுண்பாக பொருளியல் கோட்பாடுகளை தெளிவாகவும் இலகு வாகவும் தமிழில் யாவரும் இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எழுதியிருக்கிறேன்.  குறிப்பாக  வரைபடங்கள் மற்றும் கணித சமன்பாடுகளை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி கோட்பாடு களை இலகுவாக விளங்கும் வகையில் எழுதியிருக்கிறேன். 

பருநிலைப் பொருளியல்  கோட்பாடும் கொள்கையும்  என்ற எனது நூலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பும் அதன்பின்னர் பல கல்வியா ளர்கள் பேராசிரியர்கள்,  விரிவுரையாளர்கள், நண்பர்கள், மாணவர்கள் போன்றோர் என்னை மேலும் எழுதுமாறு தூண்டியமையும்  எனக்கி ருந்த இயல்பான எமுத்தாற்றலும் இணைந்து இந்த நூலை மகிழ்ச்சி யாக சிரமமின்றி எழுதுவதற்கு துணைபுரிந்ததென்றால் மிகையாகாது. யாஃ கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் எனக்கு கல்வியூட்டி உயர்நிலைக்கு என்னை உயர்த்திய எனது அன்பிற்கும் மதிப் பிற்குமுரிய ஆசிரியர்களான மனோண்மணி ரீச்சர், யாழ். இந்துக்கல்லூரி ஆசிரியர் க.சபா நாயகம் சேர் கிழக்கிழங்கை மொழியியல்துறை பேராசிரியர் பேரா.செ.யோகராஜா ஆகியோ ருக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்வதில் அளவற்ற பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். நான் உயர்கல்வி பெறுவதற்கு அடிப்படையாக இருந்த இவ்ஆசிரியர்களை தினமும் நான் வணங்குகின்றேன். 
இந்நூலை எமுதுவதற்கு காரணமானவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு எனது பணிவினை வெளிப்படுத்துகிறேன். இந்நூலுக்கு 'பருநிலை மற்றும் நுண்பாகப் பொருளியல் கோட்பாடுகள்' என்ற பெயரினைத் தானே தெரிவு செய்து, அதனையே புத்தகத்தின் பெயராக இடுமாறு எனக்கு ஆலோசனை வழங்கிய பேராசிரியர் நா.பாலகிருஸ்ணன் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்; இவ்வாக்கத்திற்கு அணிந்துரை வழங்கிய எனது அன்புக்குரிய ஆசான் பேராசிரியர் நா.பாலகிருஸ்ணன் அவர்களுக்கும்  வாழ்த்துரை  வழங்கிய கொழும்பு பல்கலைக்கழகத்தின் புகழ்பூத்த பேராசிரியர் அமலா.டி.சில்வா அவர்களுக்கும்  வாழ்த்துரை  வழங்கிய கலைப்பீடாதிபதி பேராசிரியர் N.ஞானக்குமரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன். எனது அன்புக்குரிய மனைவி வி.உதயகுமாரி அவர்கள் நான் நூல் எழுதும் பொழுதெல்லாம் என்னுடன் உடனிருந்து தேவையான உதவியினை வழங்கியிருந்தார் அவருக்கும்  என் அன்பு கனிந்த நன்றிகள். மேலும் நான் எழுதிய நுண்பாகப்பொருளியல் கோட் பாடுகளை வாசித்து அதில் மேலும் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் பற்றி ஆலோசனை வழங்கிய கொழும்புப்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் னுச. N.ரவீந்திரகுமாரன் அவர்களிற்கும் எனது நன்றிகள்.
மேலும், யாழ்பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் உள்ள பேராசிரியர்கள்,  வணிகமுகாமைத்துவ பீட பேராசிரியர்கள்,    சிரேஸ்ட விரிவுரையாளர்கள்,  நண்பர்கள் போன்றோர்  நாள்தோறும் நூலை வெளியிடுமாறு என்னை உற்சாகப்படுத்தினார்கள் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்நூலை அழகுற அச்சிட்டு பலசிரமத்தின் மத்தியிலும் பதிப்பித்த சேமமடு பொத்தகசாலை உரிமையாளர் திரு.சதபூ. பத்மசீலன் அவர்களுக்கும் இதனை கணனியில் வடிவமைப்பு செய்த செல்வி.கோமளா மற்றும் ஒப்புநோக்குதல் உதவிகளை வழங்கிய எமது துறை உதவி விரிவுரையாளர் செல்வி. கிரிஜா அவர்களிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூல் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஆலோசனைகனை யும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
சி.விஜயகுமார்,
சிரேஸ்ட விரிவுரையாளர்,
பொருளியல்துறை,
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.