புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

நல்வழி

நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார்  இயற்றியன வென்ப. 
தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களிலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய  நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல  பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும், கருத்துக் களும் இந்நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்கு கின்றன. நல்வழியிருள்ள செய்யுட்கள் பல மெய்ந் நூற்களின் முடிந்த கருத்துக்களை விளம்புவதாகும். 
இந்நூலின்கண் திருவைந்தெழுத்தும், திருநீறும் சிறப்பாக எடுத்தோதப்படுவதும், இறுதிச் செய்யுளில் திருக்குறள், திருநான்மறை முடிவு, தேவாரம், முதலிய சைவத்திருமுறைகள் என்னும் இவையெல் லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும், உண்மை நூலுணர்வையும் புலப்படுத்துவதாகும். மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய  காலம் 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகு மென்பதும் விளக்கமாம். 
இங்ஙனம்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்


ரஸ்மின், எம்.சி
Rasmin, M.C


இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சமூகவானொலி எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு நூல்கூட இதுவரை இலங்கையில் வெளியிடப்படவில்லை. சில உதிரியான கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் வெளிவந்தபோதும் சமூகவானொலியை ஒரு துறையாகக் கற்பதற்கு அவை எந்தவிதத்திலும் போதியவையல்ல. தாய்மொழியில் ஊடகக்கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன்கருதியே இத்தகைய ஒரு நூலை எழுத வேண்டியேற்பட்டது. 

இலங்கையின் பல்கலைக்கழகங்களில் ஊடகம், அபிவிருத் திக்கான தொடர்பாடல் என்பன கடந்தபல ஆண்டுகளாக போதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சமூக அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்கும் பணியும் பற்றிய அலகுகள் திருப்திப்படக்கூடிய நிலையில் இல்லை. தகவல் தொழில்நுட்பத்தின் உள்ளூர் மயமாக்கத்துடன் அபிவிருத்தி மற்றும் அபிவிருத்திக்கான தொடர்பாடல் போன்ற எண்ணக் கருக்கள் புத