மெய்யியல் |
பேராசிரியர் நா.ஞானகுமாரன் கடந்த முப்பந்தைந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மெய்யியல் துறையில் பணியாற்றிவருபவராவர். துடிப்பும் ஆர்வமும் மிக்க இவர் மெய்யியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். 'சைவசித்தாந்தத் தெளிவு', 'பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்', 'நயந்தரும் சைவசித்தாந்தம்', 'அருளாளர்களின் சமய அனுபவம்', 'மெய்யியல்', 'சைவ சமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு', 'சைவ சித்தாந்தத்தில் அத்வைத எண்ணக்கருத்து', 'வேதாந்த மெய்யியல்', 'மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும்' போன்ற பல நூல்களைப் படைத்துள்ளார். சைவசித்தாந்தத் தெளிவானது சமீபத்தில் திருத்திய பதிப்பாக வெளிவந்துள்ளது. அதேபோல இந்நூலும் அநேகரது வேண்டுகோளிற்கிணங்க திருத்திய பதிப்பாக புதிய அத்தியாயங்களும் இணைக்கப்பட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கதாகும். இவரது சைவ சித்தாந்தத் தெளிவானது சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். |