புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்

உலகின் மிக தொன்மையா மொழி நம் தாய் மொழிதமிழ்;பண்டை நாகரிகங்களுள் தலை சிறந்தது நம் தமிழ் நாகரிகம். ஆனால் நம் தமிழின் தொன்மையையும் நம் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாட்டு வரலாறு என்று பல வற்றின் பெருமைகளையும் வந்தேறி ஆரியமும் அதன் பின்தோற்றல்களும் சீர்;குலைத்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். இனப்பகைளும் அவற்றின் அடிவருடிகளும் காலம் காலமாக நம் மொழிமீதும், நம் இன வரலாற்றின் மீதும் பிறகூறுகளின் மீதும் வாய்ப்பு நேரும் போது மட்டுமின்றி வாய்ப்பை வலிய வரவழைத்தும், அரசியல் சாய்கால் பெற்றும், வெளிப்படையாகவும் கரவாகவும் தொடுத்து வரும் தாக்குதல்கள் அளவிறந்தன. குமரி முனைக்குத் தெற்கே சிலநூறு கற்கள் நிலப்பகுதி இருந்து பின், இற்றைக்கு ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகெங்கும் கடல்மட்டம் உயர்ந்த பொழுது கடலுள் மூழ்கியிருக்கலாம் என்று இன்றைய அறிவியல் ஏற்றுக்கொண்ட ஆய்வு முடிவைப் புறந்தள்ளி 'கடல் கொண்டதென்னாடு' பற்றி எழுதிய தமிழறிஞசர்கள்அனைவரையும் தாக்கி ஏளனம் செய்து நூல் வந்துள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே என்ற உண்மையை மறைத்து ஆரிய நாகரிகமே என்று பொய்யாகப் புனைந்து நிலைநாட்டும் முயற்சி ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட நடந்தது. 
இத்தகைய அறக்கேடுகளை எதிர்த்து உண்மையை மீட்டெடுக்கும் முயற்சிகள் பேரளவில் நடைப்பெறவேண்டியிருப்பினும் சிறிய அளவிலேனும் நடந்து வருவது ஓரளவு ஆறுதலளிப்பதாகும். இயற்கைச் சீற்றத்தால் அழிந்ததைவிட இனப்பகைகளாலும் அதன் பாதம் தாங்கிகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழிலக்கியங்கள் ஏராளமாகும். கிடைத்துள்ள


மா.சின்னத்தம்பி
Sinnaththamby, M

மாரிமுத்து சின்னத்தம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் பொருளியல், கல்வியியல் ஆகிய இரு துறைகளிலும் துறைபோகக் கற்றவர், கற்றுக்கொண்டிருப்பவர். இந்த இரு புலமைசார் அறிவு, ஆய்வு மரபுகளின் செழுமைகளை உள்வாங்கி புத்தாக்க சிந்தனைகளுக்கு தடம் அமைத்துத் வருபவர். 

இவர் இன்று கல்வியியலில் கல்விப் பொருளியல் என்னும் துறைசார் விருத்தியில் முழுமையான ஈடுபாடு கொண்டிருப்பவர். இவரது தொடருறு சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வுகளும் கல்வியியலில் புதுப் பரிமாணங்களாகின்றன. இதுவே இவரை ஏனைய கல்வியியல் ஆய்வாளர்களிலிருந்து வேறுபடுத்தும் பண்பாகவும் அமைகின்றது. இவரது நூல்கள் இதனையே வெளிப்படுத்துகின்றன.