Book Type (புத்தக வகை) : | குழந்தை இலக்கியம் | |
Title (தலைப்பு) : | பறவைகளின் கதை | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | PPMN:2015-03-02-029 | |
ISBN : | 978-955-0367-28-3 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | சபா.ஜெயராசா | |
Publication (பதிப்பகம்): | பத்மம் பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2015 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 29 cm 21 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 12 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 280.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | பறவையின் கதை எங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் நின்றது. அது மாம் பிஞ்சுக் காலம். பூவும் பிஞ்சும் சுமந்து மரம் அழகாக இருந்தது. காலை வேளை ஒரு காகம் பறந்து வந்தது. மாங்கொப்பிலே அமர்ந்து கொண்டது. கருமை வண்ணக்காகம். மூன்றும் அழகாக இருந்தன. காகம் இனிமையாகக் 'கா...கா...' என்றது. அங்கே இன்னொரு காகம் பறந்து வந்தது. அதன் பக்கத்திலே அமர்ந்து கொண்டது. பதிலுக்கு அதுவும் 'கா... கா....' என்றது. அதுவும் இனிமையாக இருந்தது. 'சின்னக் காகங்கள் அழகாக அழைக்கின்றன. ஏதோ நல்ல செய்தி வரப்போகின்றது' என்றார் அம்மா. காலை நேரம் நாங்கள் படித்துக் கொண்டிருந்தோம். நேற்றைய பாடம் பறவைகளைப் பற்றியது. ஆசிரியர் நன்றாகப் படிப்பித்தார். பறவைகளின் படங்களைக் காண்பித்தார். பறவைகள் போல ஒலி எழும்பும்படி ஆசிரியர் சொன்னார். நான் காகத்தின் ஒலியை எழுப்பினேன். இன்னொருவர் கிளியின் ஒலியை எழுப்பினார். வேறொருவர் குயிலின் ஓசையை எழுப்பினார். நண்பர் ஒருவர் சேவல் கூவுவது போல அழகாகக் கூவினார். ஆசிரியர் சிட்டுக் குருவியின் சத்தத்தை எழுப்பிக் காட்டினார். பறவைகள் பற்றி ஆசிரியர் சொன்னவற்றை நினைத்துப் பார்த்தோம். |
|||||||||||||
Full Description (முழுவிபரம்): | இன்னும் சிறார் இலக்கியம் தமிழில் குறிப்பாக சிறார்களுக்கான கதைகளில் கட்டாயமாக இந்தப் பழைய மரபிலிருந்து விடுபட்டு புதிதாகச் சிந்திக்கும் |
|||||||||||||
|