Book Type (புத்தக வகை) : சமய நூல்
Title (தலைப்பு) : சமய உளவியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2016-06-01-142
ISBN : 978-955-685-041-3
EPABNo : EPAB/02/18603
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 72
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 240.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    சமய உளவியல்    01
2.    சமயத் தளம்    05
3.    விருத்தி உளவியல்    07
4.    சமய நடத்தை உளவியல்    09
5.    சமயமும் உளப்பாதுகாப்பும்     11
6.    சமய மொழியின் உளவியல்    13
7.     நாட்டார் உளவியல் நோக்கு    15
8.    நாட்டார் சமயம்    17
9.    அருள் நிலையியல்    20
10.    தொன்மங்கள்    22
11.    சடங்குகள்    24
12.    வழிபாட்டு உளவியல்    26
13.     மனவெழுச்சியும் சமயமும்    28
14.    சமயக்கற்பனை    30
15.    சமய ஓவியங்களின் உளவியல்    32
16.    சமயக் கதைகளின் உளவியல்    34
17.    சமய ஆடலின் உளவியல்    36
18.    சமய இசையின் உளவியல்    38
19.    சமய அறிவு     40
20.    சமயமும் ஒழுக்கமும்    42
21.    சமயமும் சீர்மியமும்    44
22.    உளவியலும் இந்துசமயமும்    46
23.    பௌத்தமும் உளவியலும்    48
24.    இறையியலும் உளவியலும்    50
25.    மதமாற்றம்    52
26.    சமய அடிப்படை வாதம்    54
27.    நவீனத்துவமும் சமயமும்     56
28.     சமயமும் பின்னைய நவீனத்துவமும்    58
29.    சமயம்  பற்றி மார்க்சியம்    62    
30.    சமயமும் விஞ்ஞானமும்    65
31.    இறைமறுப்பு உளவியல்    68
32.    சமயம் கற்பித்தலின் நோக்கங்கள்    70

 

Full Description (முழுவிபரம்):

இது சமய உளவியல் தொடர்பாக தமிழில் முதலில் வெளிவரும் நூல். ஆங்கிலமொழியில் இத்துறையில் பெருந்தொகையான நூல்கள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் இது ஒரு பாடத் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
நவீன உளவியல் சமயத்தைப் பல பரிமாணங்களிலே ஆராய்கின்றது. அகவய நிலையில் மட்டுமன்றி புறவய நிலையிலும் சமயத்தை நோக்குதல் அறிவு நோக்கில் முக்கியமானது.
'ஒப்பியல் சமயம்' என்ற அறிவுத்துறையும் அண்மைக்காலமாகப் பெருவளர்ச்சியடைந்து வருகின்றது. சமய உளவியல் ஒப்பியல் நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமயங்களுக்கிடையே காணப்படும் பொதுத்தன்மைகள் அடிப்படையான மானிட இயல்புகளைப் புலப்படுத்துகின்றன. உளவியல் அதனை மேலும் ஆழ்ந்து நோக்குகின்றது.
இலங்கைப் பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் சமயம் ஒரு பாடமாக இடம்பெற்றுள்ள நிலையில் சமய உளவியல் பற்றிய அறிவு மேலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
சிறப்பு வாசிப்பை மட்டுமன்றி, பொது வாசிப்பையும் கருத்திற் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.

சபா.ஜெயராசா