புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அடிப்படை உளவியல்

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதி பாடினான். தமிழில் புதிய அறிவியல் நூல்களுக்கு பாரதி காலத்தில் இருந்த தேவையை மனங்கொண்டே அவன் அவ்வாறு கூறினான். பாரதி மறைந்து எண்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. பாரதி காலத்தில் கற்பனை பண்ணியிருக்க முடியாத அளவுக்கு புதிய புதிய அறிவுத் துறைகளும் அறிவும் நமது காலத்தில் பன்மடங்காகப் பல்கிப் பெருகியுள்ளன. சமூக வளர்ச்சியும் தனிமனித முன்னேற்றமும் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பெரிதும் தங்கியுள்ள இன்றைய காலத்தில் இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது  முன் எப்போதையும் விட இன்று அவசியமாகியுள்ளது. 
உளவியல் அத்தகைய ஒரு புதிய அறிவுத்துறையாகும். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்ததை விட இன்று உளவியல் பெருவளர்ச்சி கண்டுள்ளது. சமூக வன்முறைகளாலும், யுத்தங்களாலும், இயற்கை அனர்த்தங்களாலும் சமூகமும், குடும்பமும், தனிமனிதரும் பெருமளவு சிதைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகும் இன்றைய காலகட்டத்தில் உளவியல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும் தமிழில் உளவியல் நூல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. அந்த வகையில் நவீன உளவியலுக்கு ஒரு அறிமுகமாக அமைகின்ற மணியம் சிவகுமாரின் அடிப்படை உளவியல் என்னும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒரு முயற்சியாகும்.
திரு.சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர். தமிழை சிறப்புப் பாடமாகப் பயில்கிறார். தன் பட்டப்படிப்புக்கு மத்தியில் உளவியல், சுகாதார வைத்திய முகாமைத்துவம் ஆகிய கற்கைத் துறைகளிலும் டிப்ளோமா பட்டம் பெற்றவர். அறிவுத்துறை


கே.ரீ.கணேசலிங்கம்
Kanesalingam, K.T

கே.ரீ.கணேசலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் விரிவுரையாளராக உள்ளார். இவர் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் மட்டுமன்றி, ஆய்வுக் கலாச்சாரத்திலும் முழுமையான ஈடுபாடு கொண்டவர். இதற்கான தகுதியை ஆளுமையை அறிவை விருத்தியாக்குவதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 

இவர் எண்பதுகளுக்குப் பின்னர் உருவான புதிய தலைமுறைக் குழாமைச் சாரந்தவர். இதனால் சமூகப் பொறுப்பு, அரசியல் நிலைப்பாடு, கருத்து நிலைத் தெளிவு, பன்முகத் தேடல், போன்ற உயரிய பண்புகளை உள்வாங்கும் திறன் கொண்டவர். இதற்கான மனப்பாங்கு, ஆளுமை விகசிப்பு, ஆய்வு பனப்பாங்கு போன்றவை இவரது பலமான அம்சங்களாகும். திழில் அரசியல் கலாச்சாரம் பற்றிய சிந்தனைக்கும் ஆய்வுத் தேடலுக்கும் புதுக்களங்களை அடையாளங்காட்டுவதில் முனைப்புடன் உழைத்த