புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

அரசியல் விஞ்ஞானம் : அரசு பற்றிய கற்கையும் அரசை இனம்காணுதலும்

அரசியல் மற்றும் சமூக அமைதி, உறுதிப்பாடு மற்றும் பாது காப்பு என்பவற்றுக்கிடையில் நிலவும் நித்தியமான தொடர்பின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வு முன்னொருபோதும் இல்லாத ளவுக்கு இன்று எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணி யில் அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்தைப் பற்றிக் கற்பதில் ஒரு புத்தெழுச்சி எமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இன்று அரசியல் விஞ்ஞானத்தின் மூலத்துவங்கள் பற்றிய கற்கை க.பொ.த (உ.த) வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் வேரூன்றி வருகின்றது. எமது நாட்டின் பிரதான பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசியல் விஞ்ஞானத் தோடு தொடர்பான பல்வேறு கற்கை நெறிகளை தமது பாட விதானத் துக்குள் சேர்த்துள்ளன. பட்டப்படிப்பினை வெளிவாரியாகத் தொடரும் பட்டதாரி மாணவர்களுள் அதிக எண்ணிக்கையினர் அரசியல் விஞ்ஞானத்தை ஒரு பாடமாகத் தெரிவுசெய்துள்ளனர். இப்பாடத்தை முறைசார் முறையில் கற்காத சாதாரண மக்கள் மத்தியிலும் அரசியல் மீதான ஈடுபாடு அதிகரித்துள்ளது. இவ்ஈடுபாட்டை புதினத்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளினூடாகவும், கலந்துரையாடல்கள் மற்றும் கருத் தரங்குகளினூடாகவும், விரிவுரைகள் மற்றும் உரைகளினூடாகவும் இக்காலப் பகுதியில் இடம்பெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் காணமுடிகிறது.  
மக்கள்  இறைமை, அரசியல் யாப்புத் திருத்தம், அரசாங்க மாதிரி கள், அரசாங்க அதிகாரம், அரசாங்கத்தின் பணிகள், அதிகாரப் பரவ லாக்கம், மோதல், மோதல் முகாமைத்துவம், மோதல் தீர்த்தல், சட்டத் துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறைத் தொடர்புகள், பொதுக் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறை, தேசிய, சமூக, சர்வதேச சமூகத்தொட


சு.பராமானந்தம்
Paramanantham,S

சுப்பிரமணியம் பரமானந்தம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராக - ஆசிரியக் கல்வியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தொடர்ந்து கற்றல் - கற்பித்தல் பணியுடன் மட்டுமல்லாமல் முழுமையான ஆய்வுப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர்.
 
கல்விச் செயன்முறை, கற்பித்தலியல், ஆசிரியம் தொடர்பான உரத்த சிந்தனையும் தேடலும் மற்றும் ஆய்வு செய்வதற்குரிய மனப்பாங்கும் உழைப்பும் கொண்டவர். இதற்குரிய கருத்தாடலை வெளிப்படுத்துவதில் வளர்ப்பதில் நிதானமான நேர்நிலை அணுகுமுறையைக் கைக்கொள்பவர்.கோட்பாட்டு வழியிலான மொழியாக்கத்திலும் பிரயோகத்திலும் சமாந்தரமாக இயங்கும் ஆற்றல் கொண்டவர்.
 
சமூக நோக்கும் தத்துவத் தரிசனமும் புலமைத்துவத்தை ஆற்றுப்படுத்தும் என்பதில்  நம்பிக்கை கொண்டவர். இதற்காக தீவிரமாக உழைக்கவும் புத்தாக்கமான சிந்தனைகளை கற்றறியவும் விருப்பம் கொண்டவர்.  புதி