Full Description (முழுவிபரம்): |
சமகாலச் சமூகத்தின் பன்முக வளர்ச்சி நிலைகளும், அவற்றை அடியொற்றிய பொருள்கோடலின் கருத்தியல் தழுவிய இணைப்புக்களும் இந்நூலாக்கத்தின் உள்ளடக்கப் பதிவுகளாகவுள்ளன. சமூக இயல்பு தழுவிய கல்விக் கட்டமைப்பின் தொழிற்பாடுகளும் அமைப்பியல் நிலை மாற்றங்களும் (ளுவசரஉவரசயட வுசயளெகழசஅயவழைளெ) கருத்தியல் வயப் பட்ட திறனாய்வுடன் நோக்கப்பட்டுள்ளன. அறிவின் முன்னரங்கம் தொடர்ச்சியாக முன்னெழு நிலையில் நகர்த்தப்பட்டுவரும் வேளை யில் அவற்றுடன் இணைந்து செல்ல வேண்டிய தேவையையும் ஆற்றுப் படுத்தலையும் தெரிவுசெய்யப்பட்ட தலைப்புக்களில் வழங்குதல் இந்நூலாக்கத்தின் மேலெழும் பண்பாக அமைந்துள்ளது. காலாவதி யான அறிவுத் தளங்களில் நின்று நவீன அறிவுப் பிரவாகத்தைப் புலக்காட்சி கொள்ளல் சாத்தியமற்ற அறிகைச் செயற்பாடாகிவிடும் என்பதை உளங்கொள்ளல் வேண்டியுள்ளது.
கல்விச் செயல்முறையை நிலைத்த வகைப்பாட்டின் மீளாக்கத் திலிருந்து (சுநிசழனரஉவழைn ழக வாந வுலிந) 'வகைப்பாட்டைக் கடந்து செல்லும்' மேம்பாட்டை நோக்கி நகர்த்துதல் எழுச்சிகொண்டு வருகின்றது. அத்தகைய கருத்தாக்கத்தின் சமூகக் கவிநிலை இந்நூலாக்கத்துக்குரிய அறிகை விசையாக அமைந்துள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. மரபும், அதன் மாற்றமும் மாற்றங்களின் எழுகோலங்களும் (வுசநனௌ) தீவிரமான திறனாய்வுக்கு உட்படுத்தப்படுதல் சமகாலக் கல்வி எழுச்சிகளின் வேண்டுதல்களாகவுள்ளன.
திட்டமிட்ட மாற்றங்கள், விளைவு மேம்பாட்டை வருவிக்கும் நடவடிக்கைகள், அறிவின் பொருண்மிய எழுச்சி சார்ந்த மாற்றங்கள் ஆகியவை ஒருபுறம் வன்னெழுச்சி அணுகுமுறையிலும் (யுபபசநளளiஎந யுppசழயஉh) மறுபுறம் தருக்க நிதானத்துடனும் பேசப்பட்டு வரும் சமகா லத்தைய இருத்தல் நிலையானது ஆழ்ந்த அறிவுக்குரிய தேடலை மேலும் வலியுறுத்தி நிற்கின்றது. தேடலின் நெடுவழியில் எதிர் மானி டப்படுத்தல் தகர்ப்புக்கு உள்ளாக்கப்படுதல் தவிர்க்க முடியாததா கின்றது.
அறிவின் தேடல் என்பது புலமைப் பயிற்சியுடன் மட்டும் கட்டுப்பட்டு நிற்கும் செயற்பாடு அன்று. சமூக நோக்கும் மானிட மேம்பாடும் தேடலின் குவியங்களாக அமைதலை இந்நூலாக்கம் பல தளங்களிலே வெளிப்படுத்தியுள்ளது. அறிவின் செயல்முறைக்கும் அதன் வினைப்பாட்டுத் தளங்களுக்குமுள்ள தொடர்புகள் பலநிலை களிலே தொடர்புபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. ஆக்கவினை நீட்சியின் (ஊழளெவசரஉவiஎந சுநகடநஉவழைn) பரவலாக இங்கு தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் அமைந்துள்ளன என்ற அவதானிப்பும் நெறிப்பாடும் சுட்டிக்காட்டப்படத்தக்கவை.
அறிவின் கூறுகளைத் தனித்த துண்டங்களாகக் கருதுதல் தவறானது அவற்றுக்கிடையே ஊடுதொடர்புகளும் இணைப்புக் களும் உள்ளன. சமகாலத்துக்கல்வி உளவியலிலே விதந்து பேசப் பட்டுவரும் 'எண்ணக்கரு இணைவரைபாக்கல்' (ஊழnஉநிவஅயிpiபெ) அறிவுத் துண்டங்களின் உள்ளார்ந்த இணைப்பின் பொருண்மையை வலியுறுத்தி வருகின்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் ஊடு தொடர்புகள் சமகாலக் கல்வியினதும் சமூகத்தினதும் விளை வுகளை உள்ளடக்கி நிற்கின்றன.
துறைசார் அறிவுப் புலங்களில் ஆழ்ந்த ஆக்கங்களை மேற்கொள் ளும் பொழுது, குறித்த துறைகளுக்குரிய சிறப்பார்ந்த தொழில்நுட்பச் சொற்களைப் பயன்படுத்துதல் தவிர்க்க முடியாததாகின்றது. இந்த அடிப்படைத் தருக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பொழுதுதான் எந்தமொ ழியிலும் கனங்காத்திரமான துறைசார்ந்த ஆக்கங்கள் வளர்ச்சிபெற முடியும். ஆனால், தமிழ் வாசகர் சிலரிடத்துத் தவறான எண்ணக்கரு வாக்கம் நிகழ்ந்துள்ளது. எளிமையாக எழுதப்பட்ட சிறுகதைகளை வாசிக்கும் மேலோட்டமான நயப்புடன், துறைசார்ந்த ஆய்வுகளை வாசிக்க முற்படும் அத்தகையோர் செயல் பின்னோக்கிய பாய்ச்சலாகி விடும். ஆங்கில மொழியின் சொற்களஞ்சியம் விரைந்து வளர்ச்சியுற்று வருதலும், செறிவுமிக்க ஆழ்ந்த ஆய்வுகள் பெருக்கெடுத்தலும் பற்றிய கவன ஈர்ப்பின்றி தமிழியலை உலகின் நவீன அறிகை அரங்கினுக்குக் கொண்டுவர முடியாது என்ற நடப்பியல் நோக்குடன் இந்நூலில் உள்ள ஆக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சபா.ஜெயராசா
சோ.சந்திரசேகரன்
|