அப்போது ஆசிரியர் அங்கே வந்தார்.
மீன்களைப் பற்றி மேலும் சொன்னார்.
மீன்களுக்கு முள்ளந்தண்டு உண்டு.
அது ஒரு சிறப்பு எனலாம்.
மீன்களில் பல்வேறு இனங்கள் உண்டு.
பல வண்ணங்களிலும் உண்டு.
பல வடிவங்களிலும் உண்டு.
பாம்பு போன்ற வடிவமுடைய மீன்களும் உண்டு.
மீன்கள் தமது செதில்களினால் சுவாசிக்கும்.
சூழலுக்கு ஏற்ற குருதி இயல்பையும் கொண்டிருக்கும்.
பெரிய மீன்கள் சிறிய மீன்களை உணவாகக் கொள்ளும்.
சிறிய மீன்கள் சிறிய தாவரங்களை உண்ணும்.
மிதக்கும் உணவுகளையும் உண்ணும்.
திமிங்கிலம் மிகவும் பெரியது.
ஒரு யானையை வைத்திருக்கக் கூடிய
பெரிய வயிற்றைக் கொண்டது.
திமிங்கிலம் மிகவும் பெரிய பிராணி.
படகுகளையும் அது புரட்டி விடக்கூடியது.
டொல்பின் தண்ணீரில் விளையாட்டுக்களைச் செய்யும்.
மீன்கள் மனிதருக்கு உணவாகின்றன.
அவை அதிக சத்துக்கள் கொண்ட உணவாகும்.
கடல் நீரில் மீன்கள் வளர்கின்றன.
நல்ல தண்ணீரில் வளரும் மீன்களும் உண்டு.
அதற்காக மீன் பண்ணைகளை அமைக்கின்றார்கள்.
|