Book Type (புத்தக வகை) : | அகராதி | |
Title (தலைப்பு) : | சமகால அரசியல் கலாசார செல்நெறிகள் | |
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : | CBCN:2013-06-01-124 | |
ISBN : | 97-895-568-502-39 | |
EPABNo : | EPAB/2/19280 | |
Author Name (எழுதியவர் பெயர்) : | கே.ரீ.கணேசலிங்கம் | |
Publication (பதிப்பகம்): | சேமமடு பதிப்பகம் | |
Publisher (பதிப்பாளர்): | சதபூ.பத்மசீலன் | |
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): | 2013 | |
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : | 21 cm 14 cm | |
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): | 216 | |
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): | 400.00 | |
Edition (பதிப்பு): | முதற் பதிப்பு | |
Binding (கட்டு): | சாதாரணம் | |
Language (மொழி): | தமிழ் | |
Translation (மொழிபெயர்ப்பு): | இல்லை, இது ஒரு நேரடி நூல் | |
Sales Details (விற்பனை விபரம்): | விற்பனையில் உள்ளது |
Content (உள்ளடக்கம்): | 1. பிரித்தானியர் ஆட்சியில் ஈழத்தமிழரின் அரசியல் கலாசாரம்
|
Full Description (முழுவிபரம்): | ‘சமகால அரசியல் கலாசார செல்நெறிகள்” என்ற இந்நூல் 2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்த ஆய்வரங்குகளில் நூலாசிரியரால் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விரிவாக்கம் செய்யப்பட்ட விடயங்களும் ஏனைய சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு வெளிவருகின்றது. இதன் தனித்துவம் கடந்த காலத்தில் உலகில் நிகழ்ந்த அரசியல் சம்பவங்களின் பதிவுகள் ஆய்வுகளாக வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், சரியான அரசியல் பாரிவையை ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் அரசியல் இருப்பை வரலாற்று ரீதியில் நிறுவவேண்டிய கடமைப்பாடும் முக்கியமானதாகும். பயங்கரவாதம் என்ற ஓரம்சம் இஸ்லாமியர்களையும் தமிழர்களையும் எப்படி உலக அரசியல் வரைபுக்குள் பாதிக்க வைத்தது என்பது இத்தொகுப்பில் காட்டப்பட்ட பிரதான அம்சமாகும். சாமுவெல் ஹன்ரிங்டன் குறிப்பிடுவது போல் உலகளாவிய நாகரீகளுக்கிடையே நிகழும் போரில் மேலாதிக்க நாகரிகங்களால் கீழைத்தேச நாகரிகங்கள் (இஸ்லாமியர்களினதும் தமிழர்களதும்) சிதைபட்டு வழக்கிழந்து போகும் துயரத்திலுள்ளன எனக் குறிப்பிட்டார். பின்நவீனத்திற்கு பின்பான உலகம் அவ்வகை சிதைப்பின் வேகத்தை அதிகரித்துள்ளது. அறிஞர்களும் சிந்தனையாளர் களும் முற்போக்கு வாதமென கருதும் அம்சங்கள் சமூக இருப்பின் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. இதிலிருந்து சமூகங்களோ இனங்களோ அவற்றின் பண்பாட்டு கூறுகளோ மீழுவது கடினமாகவுள்ளது. அதிலும் சிறிய இன அடையாளங்களை கொண்டுள்ள தேசங்களும் தேசிய இனங்களும் எப்போதும் பெருந்தேசிய இனங்களால் காவுகொள்ளப்படுவது தவிர்க்க முடியாத இயங்கியலாக விளங்குகிறது. இவ்வுலக நியதி பெருந்தேசிய அரசுகளுகுரியதான அரசியல் பொருளாதார இராணுவ கட்டமைப்புக்குட் பட்ட தன்மை எழுச்சியடைந்துள்ளது. இதில் மனித உரிமை பிரகடனங் களாயினும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுகளாயினும் மேலாதிக்க சக்திகளின் முடிபுகளிலேயே தங்கியுள்ளது. சித்தாந்தம் இல்லாத உலக ஒழுங்கும் கொள்கையில்லாத அரசுகளும் தனிமனித கௌரவமற்ற ஆட்சிகளும் ஒரு போலி உலகத்தின் நியதிக்குள்ளே இன்றைய அரசியல் பொருளாதார நியமத்தை வைத்திருக்கின்றன.
சீனாவின் அரசியல் பொருளாதார இராணுவ சமநிலைக்குள் உலகத்தின் போக்கு மெதுவாக உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இலங்கை முதலிடத்திலுள்ளது. ஐரோப்பிய(மேற்கு) மரபுக்குட் பட்ட வெளியுறவுக் கொள்கையை கைவிட்டு இலங்கை சீனசார்புக்குள் மாறியதன் சாதகத்தன்மை அதன் இருப்பை பலப்படுத்தியுள்ளது. சீனாவின் பொருளாதார எழுச்சியும் இராணுவ வல்லமையும் அதன் உலக வல்லரசுக்கான போட்டியில் முதன்மைபெற வைத்துள்ளது. எனவே சீனாவின் முதன்மையும் இலங்கையின் முதலிடமும் ஒரே நோ;கோட்டில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன. இலங்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும் சீனாவின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவின் வரலாற்றில் முதலிடம் தவிர்க்கமுடியாத தென்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இது இலங்கையின் கொள்கை வகுப்பாளா;களின் சாதுரியத்தைக் காட்டுகிறது. இதில் இந்தியர்களின் பலவீனமும் சீனர்களின் விவேகமும்; கலந்துள்ளது. இதுவரை உலகில் நிலைத்திருக்கக்கூடிய ஆட்சி எதுவும் எழுச்சியடையவில்லை. உலக ஆட்சியில் மாற்றம் நிகழும்வரை இலங்கையின் இருப்பை பலவீனப்படுத்துவது கடினம். அதையும் தாண்டி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் லிபியா டுனிசியா பாணியில் அமரிக்கா செயல்பட வேண்டும். ஆனால் அதனை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. அதனை பிரயோகிக்கும் வல்லமையும் இந்தியாவுக்கு கிடையாது. இந்தியாவை தாண்டி செயல்படும் போக்கும் அமரிக்காவிடம் கிடையாது. இத்தகைய புவிசார் அரசியல் சூழலுக்குள்ளும் உலக அரசியலுக்குள்ளும் அகப்பட்டுள்ள இலங்கையின் அரசியல் அமரிக்க இந்திய எதிரி சீன இழுபறிக்குள் இயங்கிக் கொணடிருக்கிறது. இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு இலங்கையிலிருந்து சீனாவை வெளியேற்றும் அமரிக்க - இந்திய கூட்டின் உபாயமாகவே உள்ளது.
ஆனால் இவ் உபாயங்கள் எதனாலும் சீனாவை வெளியேற்றிவிட முடியாது. காரணம் இலங்கையின் முக்கியத்துவம் உலகளாவிய ரீதியில் முதன்மை வாய்ந்தது. போத்துக்கேயர் ஒல்லாந்தர் பிரித்தானியர் அமெரிக்கா; ஆகியோரின் கடந்தகால அனுபவம் அவ்வாறே காணப்பட்டது. ஆனால் அமெரிக்கா; இலகுவில் தமது நடவடிக்கையை கைவிடுவார்கள் என்று கூறிவிடவும் முடியாது. இவ் இழுபறி இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தையே அதிகம் பாதிக்கும். ஒரு துளி பெற்றோலியம் சமம் ஒரு துளி இரத்தம் என்றாகிய சூழல் தற்போதே ஏற்பட்டுவிட்டது. இவ் இழுபறி அரசியல் ஆரோக்கியமான இலங்கையை உருவாக்குவதாக அமையாது.
இதிலுள்ள கட்டுரைகள் பிரித்தானியர் ஆட்சியில் ஈழத்தமிழரின் அரசியல் கலாசாரம், இலங்கை தமிழர்களின் அரசியல் கலாசாரம் ஓர் அரசியல் வரலாற்றுப் பார்வை, இலங்கை அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி 2010ம் ஆண்டுத் தேர்தல் பற்றிய நோக்கு , இனப்பிரச்சினையும் சமாதான முயற்சியும் பாலஸ்தீனம் - இலங்கை ஓர் ஒப்பீடு, இலங்கை மீதான இந்திய - சீன போட்டி ஒரு மதிப்பீடு, போருக்குப் பிந்திய இலங்கை - சீன உறவு ஒரு நோக்கு, இஸ்லாமிய நாகரிகத்திற்கு எதிரான மேற்குலகத்தின் போர், பயங்கரவாதமும் உலக அரசியலும், அரசியல் அபிலாசையும் மனித உரிமைப் பிரகடனமும், நல்லாட்சியும் முகாமையும் ஆகியன ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இந்நூலை வெளிக்கொண்டு வருவதற்கு பல உதவிகளை புரிந்த உள்ளங்களை நினைவு கோருவது அவசியமானது. இந்த வகையில் யாழ்ப்பாணம், கிழக்கு, தென்கிழக்கு, புதுச்சே ரி, ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆய்வரங்குகளை நிகழ்த்திய துறைகளுக்கும் அதன் பேராசிரியர்களுக்கும் அவா;களது ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அவ்வாறே இதன் விரிவாக்கத்திற்கு வேண்டிய தகவல்களை அவ்வப்போது தந்துதவியதுடன் கணணி வடிவமைப்பிற்கும் உதவிய எஸ்.திருச்செந்தூரன், ரி.விக்னேஸ்வரன் ஆகியோரின் பங்கு உயர்வானது. மற்றும் எனது வாழ்வில் இன்பத்திலும் துன்பத்திலும் துணையாய் நின்று ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கிவரும் மனைவி சாந்தினிக்கும் எனது பிள்ளைகளான ஷரோன் ஷாரங்கிக்கும் அவர்களது உற்சாகமூட்டும் எண்ணங்களுக்கும் இந்நூல் பரிசாகியது. இறுதியாக சேமமடு பதிப்பகத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் மற்றும் இந்நூலை வடிவமைப்பிற்கு உதவிய மதுசூதனின் பங்களிப்பு மறக்கமுடியாதது.
|