புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

இலங்கையின் கல்வி வரலாறு

சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு கொள்ளல் வாழ்தலின் அடிப்படையாக   அமைகிறது. எல்லா உயிர்களும் இத்தகைய பொருத்தப்பாட்டினை ஓரளவு பெறுதலின் வழியேதான் உலகில் வாழ்தல் இயலுகின்றது. ஆனால், மனிதர் தனது சூழ்நிலையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைப் பொருத்தப்பாடு 'உயர்நிலைப்பட்டது' ஆகும்.
சூழ்நிலைக் கூறுகளின் தன்மைகளுக்கேற்பத் தம்மை தகவமைத்துக் கொள்வதுடன் தமது தேவைகளுக்கேற்பவும் மனிதர் சூழ்நிலையினை மாற்றியமைத்தலே உயர்நிலைப் பொருத்தப்பாடு. இதற்கு 'கல்வி' இன்றியமையாத கருவியாக விளங்குகின்றது. 
எந்தவொரு சமூகத்திலும் கல்வி அந்தச் சமூகத்தின் பண்பட்ட நாகரிகத் தோற்றுவாயின் ஊற்றுமூலமாகின்றது. சமூக, பொருளாதார, அரசியல் பண்பாடு முதலான துறைகளில் கல்வி முக்கியமான விசைப்படுத்தலாகவும் பரிணமிக்கின்றது. தொடர்ந்து சமூகமாற்றம், சமூகவளர்ச்சி மற்றும் மனிதவளமேம்பாடு போன்றவற்றிலும் கல்வி பெரும் தாக்கம் செலுத்தத் தொடங்குகின்றது.
வரலாற்று ரீதியாக கல்விசார் பண்புகள் சமூக மட்டத்தில் மனித சிந்தனையில் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் பன்மடங்கானவை. கல்வியின்அமைப்பு, கல்வியின்நோக்கங்கள், பாடத்திட்டங்கள், கற்றல் - கற்பித்தல் முறைகள், கல்விநிருவாக முறைகள் யாவும் புதுத்தேவைகள், புதிய நிலைமைகள் போன்றவற்றுக்கேற்ப மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வருகின்றன. இவை மனித வாழ்வியலிலும் துரிதமான பல்வேறு மாற்றங்களை  உருவாக்கியுள்ளன. எந்தவொரு நாட்டின் கல்வி வரலாற்றிலும் அந்தந்த நாட்டின் புதுத் தேவைகள் புதிய நிலைமைகள் என்பவற்றுக்கேற்ப பல்வேறு புத்தாக்கக் கட்டங்கள் தோன்றியுள்ள


முத்து இராதாகிருஷ்ணன்
Muthu Rathakrishnan

வடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவர். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், ஓவியர், நாடகவியலாளர், சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். சிறுவர்களின் சுயாதீனம், சுதந்திரச் செயற்பாடு, ஆக்க வெளிப்பாடு பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவர்.

சிறுவர் அரங்கு சிறுவர்களின் முழுமையான பங்கு பற்றலுடன் முகிழ்ந்தெழும் ஒரு செயற்பாடாகும். சிறார்களின் உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு ஆகியவையே அவர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன.  இவ்வகையில் சிறுவர் அரங்கு பற்றிய இந்நூலைப் படைத்துள்ளார்.