Book Type (புத்தக வகை) : தமிழ்மொழிக்கல்வி நூல்
Title (தலைப்பு) : தமிழர் கல்விச் சிந்தனைகள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : 2017-05-01-150
ISBN : 978-955-685-049-9
EPABNo : EPAB/2/19294
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2017
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 132
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 400.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

 

1. தமிழரின் தொன்மையான பொருள்முதல்வாதக்
2. கல்விக் கோட்பாடு - ஆசீவகம் 01
3. தொல்காப்பியமும் மனவெழுச்சிக்
4. கல்விச் சிந்தனைகளும் 09
3. தமிழ் மரபில் தாந்திரீகக்கல்வி 15
4. சமணக் கல்விச் சிந்தனை 21
5. சித்தர் கல்விச் சிந்தனை 26
6. தமிழர் கல்வியும் அளவை முறையும் 33
7. அறக் கல்விச் சிந்தனை 38
8. அழகியற் கல்விச் சிந்தனை 46
9. திருமூலரின் கல்விச் சிந்தனை 52
10. திருக்குறள் வழி எழும் கல்விச் சிந்தனை 58
11. மணிமேகலை வழி மேலெழும் பௌத்த கல்வி 66
12. திறனாய்வுக் கல்வி 72
13. வைசேடிகக் கல்வி 79
14. சாங்கியக் கல்வி 83
15. சைவக்கல்வி 88
16. இராமானுசரின் கல்விச் சிந்தனை 94
17. தொழில்நுட்பக் கல்வி 99
18. நாவலரின் கல்விச் சிந்தனை 104
19. விபுலாநந்த அடிகளாரின் கல்விச் சிந்தனை 110
20. சமகாலக் கல்வி 118
21. பிற்குறிப்பு 126

 

Full Description (முழுவிபரம்):

பல்கலைக்கழகங்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியவற்றில் மேலைப்புலக் கல்விச் சிந்தனைகள் முதன்மைப்பாட்டுடன் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மரபில் கல்விச் சிந்தனைகள் உருவாக்கம் பெறவில்லையா என்ற வினாவுக்கு விடை தரும் வகையில் இந்நூலாக்கம் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு கோணங்களில் இருந்து எழுகோலம் பெற்ற தமிழர் கல்விச் சிந்தனைகள் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைகள் சங்கப் பாடல்களில் இருந்தே மேற்கிளம்பத் தொடங்கின என்ற கருத்தைப் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் தமிழ் வீரயுகப்பாடல் தொடர்பான ஆய்விலே குறித்துரைத்துள்ளார்.
தமிழ்த் தேசிய உருவாக்கத்தில் கல்விச் சிந்தனைகளின் வகிபாகத்தைக் கண்டு கொள்வதற்கும் இந்நூல் துணை செய்யும். 
பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தமிழர் கல்விச் சிந்தனைகள் கல்வியியலில் ஒரு தனிப்பாடமாகவோ, ஒரு தனி இதவடிவம் (ஆழனரடந) என்ற நிலையிலோ ஆக்கம் பெறுவதற்குரிய புலமைக் கனதியைக் கொண்டிருத்தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தமிழரின் கல்விச் சிந்தனைகள் பற்றிய கருத்து வினைப்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற முன்மொழிவுடன், 

சபா.ஜெயராசா