Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்தியும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2009-09-02-048
ISBN : 978-955-1857-47-9
EPABNo : EPAB/02/18836
Author Name (எழுதியவர் பெயர்) : தி.கமலநாதன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2009
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 164
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

பகுதி (i)
  • சிறுவர் நட்புறவுப் பாடசாலைகள்
  • மாணவர்கள் தலைமைத்துவத்தை வளப்படுத்தல்
  • ஆசிரியர் கல்வியின் அவசியம் நிலை போக்கு
  • விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு கற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்
  • தேசிய கல்வியியற் கல்லூரிகளில் செயல் ஆய்வுக் கட்டுரைகள் சில குறிப்புகள்
  • வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அடையாளங் காணப்படும் அண்மைக்கால கல்விப் பிரச்சினைகள் சில...
  • தமிழ்ப்பாட நூல்கள் தரம் 6-11 தரமேம்பாடு தொடர்பான அவதானிப்புகளும் முன்மொழிவுகளும்
பகுதி (ii)
  • வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும் நோர்வே - இலங்கை - எதியோப்பியா ஓர் ஒப்பீட்டு நோக்கு
  • குழந்தைக் கல்வியில் ஒரு நோக்கு
  • அவசரகாலக் கல்விச் செயற்பாடுகள் - ஒரு பார்வை
Full Description (முழுவிபரம்):

சமகாலத்தில் கல்வியியல் எழுத்துகளின் ஆக்கங்களின் மறும் ஆய்வுகளின் முனைப்பு பல்பரிமாணங்களில் வெளிப்படுகின்றது. சமூக மட்டங்களில் கல்விசார் பிரச்சினைகளும் பல்வேறு கோலங்களில் விரிவுபெறுகின்றது. இதனால் கல்வியில் குவியப்படும் சிந்தனைகளும் வினைப்பாடுகளும் ஆய்வில் பண்புகளை தழுவியதாக மேற்கிளம்புகின்றது. 
இன்று கல்விப் பணிகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் புத்தாக்கச் சிந்தனைகளில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றத்தை உருவாக்கும்;;; மகிழ்ச்சிகரமான கல்விப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும். இதற்கு சமூகப் பொறுப்பும் சமூக உணர்வும் மற்றும் புலமைப் பயிற்சியும் வேண்டும். இந்த பின்புலத்தில்தான் முனைவர் தி.கமலநாதன் அவர்களது 'கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்திகளும்' எனும் நூல் வெளிவருகின்றது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் சமகாலக் கல்விப் பரப்பில் எழுந்துள்ள நடைமுறைகளை விளங்கவும் விளக்கவும் முற்பட்டதன் விளைவாகவே உருவாகியுள்ளது எனலாம். இவை புதிய அறிவையும் புதிய அனுபவங்களையும் ஒன்றிணைத்து புதிய கல்விக் கோலங்களைப் படைக்கும் திறன் பெற்றதாகவே விரிவுபடுகின்றது. 
நூலின் மையமாக இழையோடும் சிந்தனைவீச்சி சமகால கல்விசார் பிரச்சினைகளை புதிய கோணங்களில் புதிய கலங்களில் பார்க்கத் தூண்டுகின்றது. இதற்கான அவசியத்தையும் வழியுறுத்துகின்றது. அறிவை அடித்தளமாகக் கொண்டு நமக்கான இருப்பியல் கேள்விகளை எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. 
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் 'அறிவைத் திரட்டுதல்' என்னும் ஒழுகலாறு வகைப்பட்ட செயன்முறையில் ஈடுபட வேண்டியுள்ளோம். இங்கு அறிவைத் திரட்டுதல் என்பது சமூக வாழ்வின் அடிப்படைத் திறனாக இருக்க வேண்டும். இது மட்டுமன்றி வாழ்வாதார நிலைகளில் மேம்பாடுகளை வருவிக்கும் தொழிற்பாடாகவும் இருக்க வேண்டும். இந்தப் பண்புகளின் உள்வாங்கலும் அருட்டுணர்வும் தான் இந்த கல்வியியற் பதிவுகளும் பண்புசார் விருத்தியும் என்னும் நூலாக்கம்.
தெ.மதுசூதனன்