புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சமகாலக் கல்வி முறைகள் ஒரு விரிநிலை நோக்கு

ஆசிரியர் பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றிக் கல்வித்துறை யில் பணியாற்றும் சகலரும் - உதவிப் பணிப்பாளர்கள், பணிப்பாளர் கள்  உலகளாவிய ரீதியில் கல்விமுறையின் செல்நெறிகள், புத்தாக்கச் செயற்பாடுகள் என்பவற்றை அறிந்துகொள்வதால், உலகளாவிய கல்விமுறைகள் பற்றிய அவர்தம் அறிவும் புரிந்துணர்வும் பெரிதும் விரிவடைய வாய்ப்புண்டு. கற்கைநெறி  என்ற முறையில், இத்துறை யானது ஒப்பியல் கல்வி, சர்வதேசக் கல்வி என அழைக்கப்படு கின்றது. ஆங்கிலத்தில் இத்துறை சார்ந்த சஞ்சிகைகளும் நூல்களும் ஆய்வுகளும் ஏராளமுண்டு. அவற்றால் தமிழ்மட்டும் தெரிந்தவர்க ளுக்கு எதுவித பயனுமில்லை. 
உலகளாவிய ரீதியில் கல்வித்துறையில் ஏற்பட்டுவரும் முன் னேற்றங்கள், புத்தாக்கங்கள், புதுமைகள் என்பவற்றைக் கற்பதனால் கல்வியியல் துறைசார்ந்த எமது அறிவு வளர்ச்சியடைவதோடு, கல்வித்துறையின் உலகளாவிய செல்நெறிகளைப் புரிந்துகொள்ள முடியும். இச்செல்நெறிகள் என்னும் பின்புலத்தில் எமது நாட்டின் கல்விமுறை பற்றியும் ஒப்பியல் ரீதியாக நுணுகி நோக்க முடியும். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்காவும் ஜப்பானுங் கூட வெளிநாடுகளின் கல்விமுறைகளின் சிறப்பு அம்சங்கள் பற்றிய கற்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றன. 
19ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டுக்கல்வி முறை பல நாடு களாலும் விரிவாக ஆராயப்பட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஜப்பானும் ஜெர்மனியின் (அப்போதைய பிரஷ்யா) பாடசாலைக் கல்விமுறை, பல்கலைக்கழகக் கல்வி முறையின் சிறந்த அம்சங்களை ஆராய்ந்து, பொருத்தமான அம்சங்களைத் தமது நாட்டின் கல்விமுறையில் இணைத


நா.சு.சிதம்பரம்
Sithambaram, N.S

நா.சு.சிதம்பரம் 33 ஆண்டுகளாக அறிவியல் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவர். இவர் பள்ளியில் பணிபுரிந்த காலத்தில் மணவர்களுக்கு பாடங்களைப் பயிற்றுவிப்பதோடு கல்வித் துணைச் செய்றபாடுகளிலும் ஆதிக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். மாணவர்கள் பயனுறும் வகையில் மாணவர்களின் அறிவு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் அறிவுச்சுடர் எனும் மாதமிரு இதழை 19 ஆண்டுகள் நடத்தியவர். தற்பொழுது அறிவியல் ஒளி என்ற மாத இதழை நடத்தி வருகிறார்.